முடி உதிர்வை தடுக்கும்:
கறிவேப்பிலையில் புரதம் மிகுந்து காணப்படுவதால் முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கும். சிலருக்கு புரதச்சத்து குறைபாட்டால் முடி உதிர்வு ஏற்படும். அவர்கள் கறிவேப்பிலையை தினமும் எடுத்துக் கொண்டால் நல்ல மாற்றத்தை காண முடியும்.
கறிவேப்பிலையை உணவில் சாப்பிட சாப்பிட கருமையான கூந்தல் விரைவாகவும், இயற்கையாகவும் மிகச் சுலபமாகவும் கிடைக்கும்.
எப்படி மற்றும் எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வது:
கைப்பிடி கறிவேப்பிலையை மிக்சியில் சேர்த்து அரைத்து அதனை வடித்து விட்டு அந்த சாறை அப்படியே பருகலாம். சிலருக்கு அதன் சுவை பிடிக்காதெனில் அதில் 1/2 க்ளாஸ் மோர்,சிறிது உப்பு கலந்து பருகலாம். இதனை தொடர்ந்து 48 முதல் 60 நாட்கள் வரை செய்து வர மிகப் பெரிய அளவில் மாற்றத்தை பெற முடியும்.
இப்படி குறைந்த செலவில் நிறைந்த பலனை தரும் அதிலும் வெகு விரைவான பலனை நீங்களே கண் கூடாக உணரலாம். இந்த கறிவேப்பிலை மோர் ஜூஸினை குடித்து முடி கொட்டுவதை நிறுத்தி, இளநரை மறைந்து கருமை மற்றும் அடர்த்தியான முடி நமக்கு கிடைக்கும்.