கோடையில் உடல் சூட்டை தணிக்க சிறந்தது மோரா ? தயிரா? எதுவென்று தெரியுமா?

First Published | Apr 27, 2023, 5:07 PM IST

பலருக்கும் மோர் அல்லது தயிர் இந்த இரண்டில் எது உடல் சூட்டைக் குறைக்கும் என்ற ஒரு ஐயம் இருக்கும். இதற்கான விடையை தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

கோடைக்காலம் என்பதால் நம்மில் பலரும் தினமும் உணவில் தயிர் அல்லது மோரை எடுத்துக் கொள்வோம். இவை கொளுத்தும் வெயிலில் இதனை எடுத்துக் கொண்டால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்று அனைவரும் அறிந்ததே !

எனினும் பலருக்கும் இந்த இரண்டில் எது உடல் சூட்டைக் குறைக்கும் என்ற ஒரு ஐயம் இருக்கும். இதற்கான விடையை தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

கோடைக்காலம் வந்து விட்டாலே அனைவரும் காரசாரமான உணவுகளை தவிர்த்து விடுவார்கள். கார உணவுகளை எடுத்துக் கொண்டால், உடலின் மேலும் சூட்டை கிளப்பி விட்டு விடும் என்பதால் அனைவரும் காரசாரமான உணவுகளை எடுத்துக் கொள்ள கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள்.

ஆகையால் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தயிர், மோரை பலரும் அவர்களது உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள்.

தயிர் மற்றும் மோர்

தயிரும்,மோரும் பாலில் இருந்து செய்யப்படுபவை தான். இவை இரண்டிலுமே குடலுக்கு நன்மைகளை செய்யும் புரோபயோடிக்குகள்காணப்படுகின்றன. ஆனால் ஒரு நிலையில் இருந்து மற்றொன்றாக மாறும் நேரத்தில் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தன்மைகளில் சிறிய அளவிலான மாற்றங்கள் உண்டாகின்றன.

மோரில் இருக்கும் சத்துக்கள்:

மோரில் கால்சியம், வைட்டமின் பி12, ஜிங்க், ரிபோஃப்ளேவின் மற்றும் புரோட்டீன்கள் ஆகியவை அதிகமாக காணப்படுகின்றன.

மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

மோர் குடித்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும் .

அதோடு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும்.

அதோடு மட்டுமல்லாமல் புற்று நோய் செல்களை அழித்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கவும் பெரிதும் துணை புரிகின்றன.

மோர் குடிக்க சரியான நேரம்:

மோர் நீர் வடிவில் இருப்பதால்,எந்த நேரத்திலும் குடிக்கலாம். எனினும் மோரைக் குடிக்க சரியான நேரமென்றால் காலை உணவிற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பாகஎடுத்துக் கொள்வது மிக சிறந்த நன்மையை பயக்கும்.

வயிறு உபாதைகள் உள்ளவர்கள் மோரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிறு சம்மந்தமான பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

Tap to resize

தயிரில் இருக்கும் சத்துக்கள்:

தயிரில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி12, வைட்டமின் பி5, பொட்டாசியம் மற்றும் புரோட்டீன்கள் ஆகியவை அதிகளவில் இருக்கின்றன.

தயிர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

தயிரை எடுத்துக் கொள்வதால் ஹைப்பர் டென்சனை குறைக்கும் தன்மை பெற்றது.

மேலும் இதயம் சம்மந்தமான நோய்களைத் தடுக்கும் .

வயற்றில் இருக்கும் புண்களை குணமாக்கும் .

தயிரை தினமும் எடுத்துக் கொண்டால் கொழுப்பை அதிகரிக்கும்.

தோல் சம்மந்தமான பிரச்சனைகள், சுவாச பிரச்சனைகள், இருமல் போன்றவற்றை அதிகப்படுத்தும்.

எந்த ஒரு உணவு என்றாலும் சரியான நேரத்தில் சாப்பிட்டால் தான் அதன் பலன்களை நாம் முறையாக பெற முடியும். நேரம் தவறி எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் தான் உண்டாகும்.

தயிர் எடுத்துக் கொள்ள சரியான நேரம்:

தயிரை எக்காரணம் கொண்டும் இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ள கூடாது. ஆயுர்வேதத்தின் படி, பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்கள் தயிர் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளையே . மதிய நேரத்தில் தான் செரிமான மண்டலம் சிறப்பாக இயங்கும்.

எது குளிர்ச்சி தன்மை கொண்டது:

மோர், தயிர் இவை இரண்டும் உடலுக்கு குளிர்ச்சியை அளித்தாலும் தயிரை காட்டிலும் மோர் நீண்ட நேரம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

மோரை தினமும் எடுத்துக் கொண்டால் அது உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யும் ஆற்றல் பெற்றது.

குறிப்பிட்டு சொன்னால் மோரி கால்சியம் குறைபாட்டை சரிசெய்வதோடு , நீரிழப்பு பிரச்சனைகளையும் குறைக்கிறது .


தவிர மோர் உடலில் இருக்கும் தேவையற்ற தீங்கு உண்டாக்கும் நச்சுக்களை அகற்றி செரிமான செயல்முறையை திறம்பட செய்யும். மேலும் வாய் மற்றும் வயிற்று அல்சரை குணப்படுத்தும்.

ஆகையால் தயிர் மற்றும் மோர் இரண்டையும் ஒப்பிடுகையில் மோரே கோடையில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டிய பானம் . நீங்களும் மோரைக் குடித்து கோடை வெயிலில் இருந்து தப்பித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

வெறும் வயிற்றில் இதனை எடுத்தால் உடற்சூடு, உடல் எடை ,சிறுநீரக பிரச்னை இன்னும் நிறைய பிரச்னைகளை சரி செய்யுமாம்!

Latest Videos

click me!