கல்யாணத்துக்கு முன்னாலே... வருங்கால கணவருக்கு இப்படி ஒரு ஆசை.. அவருக்கு என்ன சொல்ல வேண்டும்?

First Published | Apr 27, 2023, 5:00 PM IST

வருங்கால கணவர் திருமணத்திற்கு முன்பாக உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டால் சரியா? எவ்வாறு இதை அணுக வேண்டும். வாங்க தெரிந்து கொள்ளலாம். 

இப்போது காலம் மாறிவிட்டது. திருமணத்திற்கு முன்பாக பேசி பழகி மணமக்கள் நிறைய தெரிந்து கொள்கிறார்கள். அளவுக்கு அதிகமாக தெரிந்து கொண்டு நின்று போன கல்யாணங்களும் உண்டு. இங்கு திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணிடம் தாம்பத்தியம் வைத்து கொள்ளலாமா? என்று மாப்பிள்ளை கேட்ட விவகாரம்.. என்ன பதில் சொல்ல வேண்டும் நிபுணரின் பதில். 

"எனக்கு 20 வயது. சில நாள்களில் திருமணம். எல்லாம் நன்றாக போய்கொண்டிருக்குறது. என் வருங்கால கணவர் திருமணத்திற்கு முந்தைய உடலுறவில் ஈடுபட விரும்புகிறார். எனக்கு இதற்கு என்ன சொல்லவென தெரியவில்லை"என்கிறார் வாசகி. 


நிபுணரின் வழிகாட்டல்:"கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு வரை கலாச்சாரம், பாரம்பரியம் ஆகிய காரணங்களுக்காக திருமணத்திற்கு முந்தைய உறவு தடை செய்யப்பட்டிருந்தது. மேற்கத்திய நாடுகளில் இது சாதாரணமாக நிகழக்கூடியது. திருமணம் இருவரின் மனம் மட்டுமல்ல, உடலும் இணையும் பந்தம். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உங்களுக்கு அன்பும் பாசமும், இரக்கமும், பரிவும் இருக்க வேண்டும். அப்போது உங்களுக்குள் நல்ல பிணைப்பு ஏற்படும். 

நீங்கள் எப்போதும் செய்யவேண்டியது உங்கள் துணையிடம் நேர்மையாக இருப்பதுதான். நீங்கள் விருப்பம் இருந்தால் பாரம்பரிய மதிப்புகளுடன் திருமணம் செய்துகொள்ளலாம். அதை போலவே விரும்பினால் மேற்கத்திய முறைப்படியும் உங்கள் துணையுடன் இணையலாம். இது உங்கள் விருப்பம். உண்மையில் உங்கள் துணை எப்படிப்பட்டவர் என்பதை அறிந்த பின்னர் அவரோடு உறவு கொள்ளலாம். திருமணத்திற்கு முந்தைய உடலுறவு உங்களுக்கு சங்கடமாக இருந்தால், அதை வருங்கால வாழ்க்கைத் துணையிடம் சொல்லுங்கள். தயங்க வேண்டாம். 

இதையும் படிங்க: நண்பர்களாக இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் என்னாகும் தெரியுமா?

Relationship Tips- Far from a lover- Your ex is not like this

திருமணத்திற்கு முந்தைய உடலுறவுக்கு அவர் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்? அதை ஏன் உங்களிடம் இவ்வளவு விரைவாக எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசி முடிவெடுப்பது நல்லது. நீங்கள் உங்கள் துணையை புரிந்து கொள்ளுங்கள். ஆனால் உங்களுடைய எல்லையை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் மனதளவில் நெருக்கமான உறவை விரும்பினால், உங்கள் துணையிடம் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். சில நாட்களில் திருமணம் என்றால் சில நாள்கள் பொறுத்திருக்கலாம்... அதுவும் உங்கள் விருப்பம் தான். 

இதையும் படிங்க: அடிக்கடி சுய இன்பம்... இந்த பாதிப்புகள் வருமா? உண்மை என்ன?

Latest Videos

click me!