அடிக்கடி சுய இன்பம்... இந்த பாதிப்புகள் வருமா? உண்மை என்ன?

First Published | Apr 27, 2023, 4:30 PM IST

சுயஇன்பம் செய்வதால் ஏதேனும் பாதிப்புகள் வருமா? சுய இன்பம் செய்வது உண்மையில் நல்லதா?ஆண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் முழுதகவல்கள் உள்ளே!! 

சுய இன்பம் செய்வதால் உடல் நடுக்கம், சோர்வு, பதற்றம், விறைப்பு தன்மை கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது முழுக்க உண்மையல்ல. உங்களுக்கு சுய இன்ப பழக்கம் இருந்தால் உடலில் எந்த பிரச்சனையும் வராது என்று தான் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மத நம்பிக்கை கொண்ட சிலருக்கு சுய இன்பம் செய்யும் போது குற்ற உணர்ச்சி ஏற்படும். இதனால் தங்களுக்கு வரும் உடல் நல பாதிப்புகளை கூட அதன் விளைவுகள் தான் என்று சிலர் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் சுய இன்பம் மனதை அமைதிபடுத்தி நல்ல தூக்கத்தை தருகிறது.  

உடல் நடுக்கம், விறைப்பு கோளாறு, மன அழுத்தம், சோர்வு இப்படி தொடர்ச்சியான பிரச்சனைகள் இருந்தால் உடலில் வேறு பாதிப்புகள் இருக்கலாம். மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும். இதற்கும் சுய இன்பத்திற்கும் தொடர்பில்லை. சுய இன்பம் செய்வோர் குற்ற உணர்ச்சி கொள்ள தேவையில்லை. இந்த உணர்ச்சி வந்துவிட்டால் உடலில் பிரச்சினை இருப்பது மாதிரியான பிரமை ஏற்படும். திருமணம் ஆகாமல் சுய இன்பம் செய்து கொள்ளும் சிலர், திருமணம் செய்யவே தயங்கும் நிலை உள்ளது. 


சுய இன்பம் செய்து தங்கள் ஆற்றலை வீணடித்துவிட்டோமோ என்று கூட சில ஆண்கள் திருமணத்தில் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் அப்படி எந்த சிக்கலும் ஏற்படாது. உங்களுடைய தாம்பத்தியம் உங்களின் குற்றவுணர்ச்சியையும், பலவீனத்தையும் மறக்க செய்துவிடும். உங்களுக்கு விரைந்து வெளியேறும் பிரச்சனை இருந்தால் அதனால் தாமத்திய உறவில் ஈடுபடுவதில் தயக்கம் காட்டக் கூடாது. சீக்கிரம் விந்து வெளியேறுவதை தடுக்க உடலுறவில் அவசரம் காட்டக் கூடாது. பாலியல் முன்விளையாட்டுகளில் ஈடுபட்டால் உடலுறவில் நன்கு செயல்பட முடியும்.விந்து முந்துதல் பிரச்சனையும் சமாளிக்கலாம். 

தாம்பத்தியம் கொள்ள டிப்ஸ்!! 

1. மனைவியை கட்டியணைத்து முத்தமிடுங்கள்.. அவர்களின் உடலை ஆராதிக்க கற்று கொள்ளுங்கள்.

2. மனைவி உங்கள் தொடுதலில் உச்சகட்டம் அடைந்த பின்னர் உடலுறவை ஆரம்பியுங்கள்.  

இதையும் படிங்க: முதலிரவு அன்று யோசிக்காமல் ஆண்கள் செய்யும் தவறுகள்!! காலம் முழுக்க துரத்துமாம்!!

தாம்பத்தியம் கொள்ள டிப்ஸ்!! 

3. கிளர்ச்சி வந்த பின்னர் வேகத்தை மெல்ல குறைத்து இயக்கத்தை நிறுத்திவிடுங்கள்.

4. வெவ்வேறு பொசிஷன்களில் உறவு கொள்ளுங்கள். 

5. விந்து முந்தி வருவது போல தோன்றினால் கொஞ்சம் நிதானமாக மேற்கொண்டு செய்யுங்கள்.

இதையும் படிங்க: நண்பர்களாக இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் என்னாகும் தெரியுமா?

Latest Videos

click me!