சர்க்கரை, அதிக மருந்துகள் உட்கொள்ளுதல், போதுமான தண்ணீர் குடிக்காமை போன்ற பழக்கவழக்கங்கள் கல்லீரலை மெதுவாக சேதப்படுத்தும். உடனடியாக அவற்றைக் கண்டறிந்து கல்லீரலைப் பாதுகாக்க வேண்டும்.
நம்முடைய உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு கல்லீரல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. பித்தநீர் சுரக்க, காயங்கள் ஆற, உயிர்ச்சத்துக்கள், கொலஸ்ட்ரால் போன்ற பல முக்கிய செயல்பாடுகளுக்கு கல்லீரல் தான் பெரிதும் உதவுகின்றது. ஆனால் நாம் தெரிந்தோ தெரியாமலே செய்யும் நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்களால் கல்லீரல் மிக மோசமாக பாதிப்படைகின்றன. சில சமயங்களில் அதன் விளைவாக கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளன. அவை என்னென்ன பழக்கங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
25
சர்க்கரை நிறைந்த பானங்கள்:
பழசாறுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதிக சர்க்கரை உள்ளடக்கம் கல்லீரலில் கொழுப்பை ஏற்படுத்தி கொழுப்பு கல்லீரலுக்கு வழிவகுக்கும்.
நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறை
நாள் முழுவதும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறையால் உடலில் இன்சுலின் செயல்திறன் குறையும். இதனால் கல்லீரலை சுற்றி கொழுப்பு சேர்ந்து ஆபத்தான நிலையை ஏற்படுத்தும்.
35
வலி நிவாரண மருந்துகள்
வயிற்று வலி, தலைவலி போன்றவற்றிற்கு அடிக்கடி வலி நிவாரண மருந்துகள் எடுத்துக் கொண்டால் அது கல்லீரல் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும்.
தவறான முறையில் சாப்பிடுதல்
சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது அல்லது உணவுகளை தவிர்க்கும் டயட்டுகளைப் பின்பற்றுவது கல்லீரலுக்கு நல்லதல்ல.
உடலில் போதுமான அளவு நீர் இல்லை என்றால் கல்லீரல் சரியாக செயல்படாது. எனவே ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.
சப்ளிமெண்ட்கள்
நீங்கள் இயற்கை அல்லது மூலிகை என்று நம்பி எடுத்துக் கொள்ளும் சில சப்ளிமெண்ட்களும் கல்லீரலை மோசமாக பாதிக்கும். எனவே மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு பிறகு தான் எதையும் சாப்பிட வேண்டும்.
55
தூக்கம் அவசியம்
நீங்கள் தினமும் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். ஏனெனில் கல்லீரல் சுத்திகரிப்பு செயல்பாட்டிற்கு தூக்கம் மிகவும் அவசியம். தூக்கம் இல்லையென்றால் கல்லீரல் பாதிக்கப்படும்.