உங்களது உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். எனவே இவற்றை தவிர்க்க, கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க, முதலில் உங்களது உணவு பழக்கத்தில் உடனடியாக மாற்றங்களை செய்வதுதான் நல்லது.
மேலும் கொலஸ்ட்ரால் பிரச்சினையை குறித்த பல கட்டுக்கதைகள் உள்ளது. அதாவது கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால் பால் சம்பந்தப்பட்ட பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. காரணம் இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்குமாம். சரி இப்போது அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பால் குடிக்கலாமா? கூடாதா? என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.