ப்ரக்கோலி காபி செய்ய தேவையான பொருள்கள்:
ப்ரக்கோலி தூள் - 2 ஸ்பூன்
காபித்தூள் -1/2 ஸ்பூன்
பால் - 1 கப்
தேன் -சிறிது
செய்முறை விளக்கம்:
இப்போது ஒரு கப் காய்ச்சிய பாலில் ப்ரக்கோலி பவுடர்,காபித்தூள் மற்றும் தேன் ஆகியவை கலந்து குடித்தால் ப்ரக்கோலி காபி ரெடி! இந்த ஒரு காபியில் சேர்க்கப்படும் 2 ஸ்பூன் ப்ரக்கோலி பவுடர் 1/2 கப் ப்ரக்கோலியை பச்சையாகச் சாப்பிட்டதற்கு சமமாகும்.
ப்ரோக்கோலி காபியும் எடை இழப்பும்:
இதில் குறைந்த கலோரிகள் இருப்பதோடு அல்லாமல் , நமது அன்றாட வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்களும் மற்றும் நார்ச்சத்தும் நிரம்பியுள்ளதால் இதனை சாப்பிட்ட நீண்ட நேரம் கழித்தும் வயிறுக்கு நிறைவான உணர்வைத் தருவதால் வேறு எதையும் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.
தவிர இதிலுள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் உடலில் தங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுவதன் மூலம் உடல் எடையைக் கணிசமாக குறைக்க துணை புரிகிறது. நீங்களும் இந்த ப்ரக்கோலி காபியை செய்து சாப்பிட்டு பலன் அடையுங்கள்.