ஹரியானா, கர்நாடகா முறையே இருமாநிலங்களிலும் இந்த வைரஸ் தாக்கியதால் இருவர் உயிரிழந்த நிலையில், திருச்சியிலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதற்கு முன்பும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை பாதிப்புகள் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. இந்த வைரஸ் எப்படி பரவும், எப்படி தடுக்க வேண்டும் என்ற முக்கிய தகவல்களை இங்கு முழுமையாக காணலாம்.
இந்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் சுவாச நோய்த்தொற்றை உண்டாக்குகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டால் முதலில் லேசான சுவாச பிரச்சனை வரும். அதன் தொடர்ச்சியாக கடுமையான நிமோனியா ஏற்படலாம். கடுமையான சுவாச பிரச்சனை முதல் மரணம் கூட ஏற்படுகிறது.
அறிகுறிகள்
• பயங்கர குளிர்
• கடும் இருமல்
• காய்ச்சல்
• வாந்தியும், குமட்டலும்
• தொண்டை வலி
• தசைகளிலும் உடலின் சில பகுதியிலும் ஒரு விதமான வலி
• வயிற்றுப்போக்கு
• சுவாசக்கோளாறு
• மார்பு பகுதியில் வலி
• தொண்டை வலி இந்த அறிகுறியில் ஏதேனும் அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
வைரஸ் எப்படி பரவும்..
இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபர் இருமல், தும்மல் மூலம் பரவும். காய்ச்சல் அறிகுறி இருப்பவரிடம் நெருங்காமல் இருப்பதே நலம். பாதிக்கப்பட்ட நபருடன் உரையாடும்போது வெளிவரும் நீர்த்துளிகள் இந்த காய்ச்சலை உண்டாக்கும். காய்ச்சல் பாதித்தவரின் வாய், மூக்கை தொட்டால் பரவும். கர்ப்பிணிகள், பெண்கள், இளம் குழந்தைகள், முதியவர்கள், ஏற்கனவே மருத்துவப் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இந்த காய்ச்சல் எளிதில் பரவலாம்.