தாய்ப்பால் கொடுப்பது தாயின் பூரிப்பான செயல். குழந்தை தன் மார்புக்காம்பில் உதட்டை வைக்கும் குறுகுறுப்பான தருணத்திற்கு பெரும்பாலான பெண்கள் தவம் கிடக்கின்றனர். அப்படியிருக்கும்போது இங்கு தனக்கு பிறந்த குழந்தைக்கு மாமியார் தாய்ப்பால் ஊட்டுகிறார் என மருமகள் புலம்பி தவிக்கிறார். அதை விரிவாக காணலாம்.
வாசகியின் கேள்வி:"நான் குளிப்பதற்கு போயிருந்தேன். திரும்பி வரும்போது, எனக்கு பிறந்த குழந்தைக்கு என்னுடைய மாமியார் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். என் குழந்தை அழுத காரணத்தால் பாலூட்டியதாக அவர் கூறினார். குழந்தையின் அழுகையை நிறுத்த தன் மார்பில் குழந்தையின் வாயை பதித்ததாகவும் கூறினார்.
ஆனால் குழந்தைக்கு ஏதேனும் விளையாட்டு காட்டியிருக்கலாம். ஆனால் ஏன் அப்படி செய்யவேண்டும். எனக்கு இது அசாதாரணமாக தோன்றுகிறது. எந்த வீட்டில் இப்படி நடக்கும்? நான் என் கணவரிடம் இதை சொன்னேன். அவர் அதை விட்டுதள்ளு என சாதாரணமாக சொல்கிறார். இப்படி மீண்டும் நடக்க நான் விரும்பவில்லை! எனது மாமியாரிடம் இதை எப்படி சொல்லி புரியவைப்பது?"என வாசகி தன் சொந்த அனுபவத்தை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நிபுணரின் பதில்:"இந்தக் கேள்விக்கு சட்டென சொல்லும் வகையில் எளிதான பதில் இல்லை. இது உங்களுக்கும் உங்கள் மாமியாருக்கும் இடையே உள்ள உறவை பொறுத்தது. சில தம்பதிகள் மாமியாருடன் வரும் பிரச்சினையை வெளிப்படையாக விவாதிப்பார்கள். ஆனால், மற்றவர்கள் அதை மிகவும் கஷ்டமான விஷயமாக நினைக்கலாம். அதனால் உங்கள் மாமியாருடன் எப்படி இந்த விஷயம் பற்றி பேசினால் அவர் காயப்படமாட்டார் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
மாமியாருடன் பேசும் முன் சில விஷயங்களை மனதில் வைத்து கொள்ளுங்கள்.
1. இந்த விஷயத்தை உங்கள் மாமியாருடன் பேசும்போது மரியாதையுடன் இருப்பது முக்கியம். அவரை ஒருபோதும் குற்றஞ்சாட்டக் கூடாது. அவருக்கு தவறான எண்ணம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
2. அந்த உரையாடலை நேர்மறையாக மட்டும் வைக்க முயலுங்கள். நெகட்டிவான வார்த்தைகளை சொல்ல வேண்டாம்.
3. உங்கள் கவலைகளை அவரிடம் தெளிவாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்தவும்.
இதையும் படிங்க: நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்க பேரீச்சம் பழம் 1 போதும்.. காலையில் இதை சாப்பிட்ட டயர்டே ஆகமாட்டிங்க..
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது அது தனிப்பட்ட முறையில் குழந்தையுடன் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த நெருக்கம் தாய்க்கும் குழந்தைக்கும் இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள். இது இயல்புதான். அதை உதாரணத்துடன் எளிமையாக சொல்லுங்கள். அவர் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியது உங்களுக்கு கோபத்தை வரவழைத்தது என கடுமையாக பேசாமல், குழந்தை அழுகையை நிறுத்த அவர் செய்தது இயல்பானதாக இருந்தாலும் நீங்கள் பொசசிவ்-ஆ இருக்கிறீர்கள் என்பதை தன்மையாக சொல்லி புரிய வையுங்கள்.
இந்த விஷயத்தில் கோபம், வெறுப்பு ஆகியவை தவிர்த்து அன்புடன் உரையாடலை தொடங்குங்கள். நிச்சயம் உங்களுடைய மாமியார் இதை புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. நலம் வாழுங்கள்.
இதையும் படிங்க: வெயில் காலத்தில் 1 'தேங்காய் பூ' சாப்பிடுங்க! இந்த 'பூ'வுக்கு பல நோய்களை விரட்டி அடிக்கும் மகிமை இருக்கு