உயிருக்கு உயிராக காதலிப்பவர்களின் 5 வகையான படுக்கை ரகசியங்கள்..!!

First Published | Mar 13, 2023, 11:34 AM IST

தம்பதிகள் மற்றும் காதலர்களுக்கு இடையேயான பாலியல் செயல்பாடுகளில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன? கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 
 

உடலுறவு என்பது இரு உடலும் ஒன்று சேர்வது மட்டுமில்லை. இருவருடைய ஸ்பரிச தீண்டல், உரையாடல், அன்பு பரிமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளுடன் அடங்கியது தான் உடலுறவு. படுக்கையை பகிர்ந்துகொள்ளும் போது சில தம்பதிகள் தவறு செய்வது உண்டு. ஒருசிலர் உடனடியாக பாலுறவு கொண்டு விட்டு, அடுத்த வேலையை பார்க்க வேண்டும் என்று எண்ணுவார்கள். மீதமுள்ளவர்களுக்கு புதியவை எதுவும் தெரியாது, பழைய நடைமுறையில் மட்டுமே கலவி கொள்வர். உடலுறவு என்று வரும் போது, என்ன செய்ய வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? என்று பலருக்கும் தெரியாது என்பது தான் உண்மை. படுக்கையில் ஒன்றிணையும் போது உடலுறவையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் உள்ளன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

உரையாடல்

சிறப்பாக உடலுறவு கொள்ளும் தம்பதிகள் அல்லது காதலர்கள், எப்பொழுதும் உரையாடுவதை தவிர்ப்பது கிடையாது. வெறும் பேச்சு மட்டுமில்லாமல், உடலுறவில் ஈடுபடும் போது தங்களுடைய காதல் விளையாட்டுக்கள் குறித்து காதுகளில் ரகசியம் பேசிக்கொள்வார்கள். இதன்மூலம் இருவருக்குமிடையில் சிறப்பான உடலுறவு அனுபவம் கிடைக்கிறது. இதன்மூலம் தம்பதிகளுக்கு இடையில் காதலும் அன்பும் இல்லறமும் மேம்படுகிறது.


முன்விளையாட்டு

கலவியின் போது சிற்றின்பம் நிலைக்க வேண்டும் என்று விரும்பும் காதலர்கள், உடலுறவுக்கு முன்பு பாலியல் முன்விளையாட்டில் ஈடுபடலாம். இதன்மூலம் தம்பதிகள் அல்லது காதலர்களுக்கு இடையில் எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் நெருக்கம் உள்ளிட்டவை உருவாகிறது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் உடலை ஆராய்வதற்கும், முத்தமிடுவதற்கும், தொடுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இதன்மூலம் ஒருவர் மீது ஒருவர் தங்களுடைய காதலையும் அன்பையும் இழக்கமாட்டார்கள். 

உள்ளாடை அணியாமல் விட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

புதிய விஷயங்கள்

பொதுவாக உடலுறவை ஒரே நிலையில் இருந்து மேற்கொள்வது விரைவாக சலித்துவிடும். புதிய நிலைகள் மற்றும் பல்வேறு நுட்பங்களை முயற்சிப்பதன் மூலம் உங்களுடைய தாம்பத்தியம் மேம்படும். மேலும் உடலுறவின் போது வெவ்வேறு பாலின நிலைகளை முயற்சிப்பது உறவை வலுப்பெறச் செய்யும். இது உங்களுக்கும், உங்களுடைய துணைக்கும் உடலில் இருக்கும் பாலுணர்வுப் பகுதிகளை மேலும் ஆராய உதவும். 

அவசரம் கூடாது

ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலர்கள் எதற்கும் அவசரப்படமாட்டார்கள். அவர்கள் தங்களுடைய உடலுறவின் போது நிதானத்தை கடைப்பிடிக்கின்றனர். பொதுவாகவே சிற்றின்ப அசைவுகள் மிகவும் மெதுவாக நடக்கும் போது, உடலுக்கு மகிழ்ச்சியை தரும். அவர்கள் அந்த தருணத்தை நல்ல முறையில் அனுபவிக்க முடியும். அதனால் தம்பதிகள் எப்போதும் மகிழ்ச்சியை பெறுவதில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதே என்று மணமக்கள் வரம்பு மீறிவிடக்கூடாது..!!

ஆராய்ச்சி

தங்களிடம் சிகிச்சைக்கு வரும் தம்பதிகள் பலரிடம், படுக்கையில் பரிசோதனை செய்வதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வெவ்வேறு வகையான செக்ஸ் டாய்ஸ், லூப்கள் மற்றும் பிற செக்ஸ் பாகங்கள் உங்கள் செக்ஸ் வழக்கத்தை மாற்றும். இதுபோன்ற பாலியல் ஆராய்ச்சி செய்வதன் மூலம் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அன்பு ஆர்பரித்துக் கொட்டும். இதன்மூலம் உங்களுடைய திருமண வாழ்க்கையும் அல்லது காதல் வாழ்க்கையும் வலுவாக இருக்கும்.
 

Latest Videos

click me!