பெண்கள் எத்தனை வழிகளில் உச்சக்கட்டம் அடைவார்கள்? ஆண்கள் அதற்கு என்ன வித்தை பண்ணனும் தெரியுமா?

First Published | Mar 10, 2023, 4:50 PM IST

பெண்களை எளிதில் உச்சக்கட்டம் அடைய செய்யும் வித்தைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

பெண்களுடைய உடல் ஒரு புத்தகத்தைப் போல, அதை புரட்ட தெரிந்த விரல்களுக்கு சொர்க்கம் கிடைக்கும். பெண் எனும் அந்த புத்தகத்தை சரியாக வாசிக்க கற்றுகொண்டால் இருவரும் மகிழ்ச்சி கடலில் மூழ்கி திளைக்கலாம். பெண்களை உச்சக்கட்டம் அடை செய்யும் எளிய வழிகளை இங்கு காணலாம். 

கிளிட்டோரிஸ் என்பது ஒரு சின்ன நரம்பு தொடர்புடைய அமைப்பாகும். ஆனால் இது பெண்களுக்கு பாலியல் இன்பத்தை அள்ளி கொடுக்கும். ஒருமுறை கூட உச்சக்கட்டம் அடையாத பெண்களும் கிளிட்டோரிஸை தொடும்போது கிளர்ந்தெழுவார்கள். அந்த இடத்தை நீங்கள் தூண்டினால் பெண்கள் விரைவில் உச்சக்கட்டத்தை அடைய வாய்ப்புள்ளது.


அது சரி க்ளிட்டோரல் ஆர்கஸம் எப்படி பெறுவது..? பெண்ணுறுப்பின் மீது கைகளை வைத்து வட்ட வடிவில் விரல்களால் தடவி கொடுக்கலாம். விருப்பம் இருப்பவர்கள் விரல்கள், உதடுகள் மூலமும் தொட்டு கொள்ளலாம். தொடும் போது இணையின் முகமாற்றத்தை வைத்து எந்த தொடுகை அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை அறியுங்கள். 

உடலுறவு கொள்ளும்போது வெறுமனே 5 நிமிடங்கள் இயங்குவதை பெண்கள் விரும்பவில்லை. அவர்களின் தோலோடு தோல் உரசி உடல்கள் பேசி கொள்வதால் உணர்வுபூர்வமாக இணைய முடியும். யோனி மூலம் உடலுறவு கொள்வதை விடவும் தொடுகைகள் உச்சக்கட்டத்தை கொடுக்க முடியுமாம். 

ஜி ஸ்பாட் என்றால் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிக்கு சரிசமமான பெண் புள்ளி சிறுநீர்க்குழாயின் முன்னால் யோனியின் சுவரில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பகுதியை உங்கள் கணவன்/ காதலன் தொட்டு தூண்டினால் எளிதில் உச்சக்கட்டம் அடைய முடியும். இது பெண்களின் பாலுணர்வை அதிகமாக தூண்டும் இடம் எனலாம். 

பெண்களின் மார்பகக்காம்புகளை தொடும்போது அவர்களுக்கு ஆக்ஸிடாஸின் வெளியாகும். இதனால் அவர்களின் கருப்பை, யோனி சுவர்களில் சுருக்கங்கள் உண்டாகும். இதன் தொடர்ச்சியாக உச்சக்கட்டம் அடைகிறார்கள். 

இதையும் படிங்க: கணவரை ஈஸியா ஏமாத்தி கள்ள உறவு கொள்ளும் பெண்கள்.. கையும் களவுமா மாட்டிக்கிட்டா இதை சொல்லி தப்பிச்சுடுறாங்க..!

பாலியல் ஆசையை தூண்டும் வகையிலான பாடல், படம், கதை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கேட்டாலோ பார்த்தாலோ உடலில் மேலும் கீழும் ஒருவித கூச்சம் உண்டாகும். அந்த இன்பம் காரணமாக பிறப்புறுப்பில் சில வித்தியாசங்கள் தோன்றும். அது மாதிரி விருப்பமான ஒருவருடன் உணர்ச்சிரீதியாக தொடர் கொண்டால் உச்சம் பெறலாம். இது நொடிகளில் நடந்து முடியும். கணிக்க முடியாது. பெண்களே உங்கள் துணையுடன் இருக்கும்போது வெட்கப்படாமல் முடிந்தவரை உங்களை உச்சக்கட்டம் அடைய செய்யும் வித்தை எது என்பதை புரிந்து கொண்டு உடலுறவில் அடுத்த கட்டத்திற்கு நகருங்கள். 

இதையும் படிங்க: சகோதரிமுறை பெண்கள் மீது தவறான செக்ஸ் நினைப்பு..காம இச்சைகளால் அவதியுறும் வாசகருக்கு நிபுணர் சொன்ன அட்வைஸ்

Latest Videos

click me!