உங்கள் ’செக்ஸ் லைஃப்பை’ மாற்றும் 5 வெப் சிரீஸ் டிப்ஸ்..!!

First Published | Mar 13, 2023, 1:30 PM IST

நீண்டகால திருமண வாழ்க்கை எப்போதும் உயிர்ப்புடன் இருப்பதற்கு பாலியல் இன்பம் முக்கியமானது. ஒருவேளை பாலியல் இன்பம் சலிப்பான கட்டத்தை எட்டும் போது, வேறு சில வாய்ப்புகள் தேடுவோம். அந்த வகையில் தற்போதைய வாழ்க்கை முறைக்கு டிரெண்டிங்கில் இருக்கும் விஷயம் வலைத் தொடர்கள். நம் இந்தியாவில் செயல்படும் பல்வேறு ஓ.டி.டி தளங்கள் மூலமாக, நூற்றுக்கணக்கான வலை தொடர்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. ஒவ்வொருவருடைய விருப்பங்களுக்கு ஏற்றவாறு தொடர்கள் தயாரிக்கப்பட்டு ஓ.டி.டி தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதில் காதலும் காமமும் அடங்கும். ஆன்லைன் வலைத் தொடர்கள் மூலமாக செக்ஸ் லைஃபை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

கொஞ்சம் சாகசம் இருக்கட்டும்

உங்கள் துணையுடன் உடலுறவு கொள்ளும்போது கட்டுப்பாடுகள் எதற்கு? அதனால் விரும்பியவற்றை முயற்சி செய்யுங்கள். எதார்த்த வாழ்க்கைக்கு வேண்டி சில விதிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் அவை காதலுக்கும் காமத்துக்கும் எதற்கு? வெப் தொடர்களில் வருவது போன்று, உங்கள் துணையுடன் பல்வேறு கட்ட காதல் முயற்சிகளை கையாளுங்கள். அது உங்களுடைய வாழ்க்கையை சாகசமாக மாற்றும்.
 

இது பெண்ணுக்கும் பொருந்தும்

பாலியல் முன்விளையாட்டு என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும். பல ஆண்கள் உடலுறவு முன்னுரிமை தருவதை விடவும், முன்விளையாட்டில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இன்பம் தரும் பெண்ணுக்கு, ஆண்களும் இன்பம் வழங்க வேண்டும் என்கிற புரிதல் பலருக்கும் இருப்பது கிடையாது. ஆனால் எப்போதும் உங்களை நீங்கள் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுடைய பார்டனருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அதேபோன்று ஆணுறை பயன்படுத்துவதிலும், சில புதுமைகளை பின்பற்றலாம். எனினும் அது பாதுகாப்பு உடலுறவை உறுதி செய்ய வேண்டும். 
 


பாலியல் வாழ்க்கைக்கு அர்த்தம் சேருங்கள்

குழந்தை பிறந்த பிறகு பல தம்பதிகள், தங்களுடைய திருமணம் மற்றும் பாலியல் வாழ்க்கை மீது கவனம் செலுத்துவது கிடையாது. இதன்காரணமாகவே பலரும் திருமணத்தை மீறிய உறவுக்குள் நுழைந்திட வழிவகை செய்கிறது. உங்களுடைய துணையுடனான பாலியல் வாழ்க்கை சலித்துப் போகாமல் இருக்க, ரோல் பிளே மற்றும் நிலைபாடு போன்ற புதிய விஷயங்களை படுக்கையில் முயற்சி செய்து பாருங்கள். ஒருவிஷயம் நீண்ட காலமாக நம்மிடையே இருந்தால், அதன்மீதான கவனம் குறைந்துவிடும். அதற்கு திருமண வாழ்க்கையும் விதிவிலக்கல்ல.

Brea up Sex : பிரேக்-அப் செக்ஸில் ஈடுபடுவது சரியான முடிவு கிடையாது- ஏன் தெரியுமா..?

வெளிப்புற பகுதிகளில் ஊடல்

கோடைக்காலம் வந்துவிட்டது. அதனால் நம்மில் பலரும் நீர்நிலைகள், காட்டுப் பகுதிகள் உள்ளிட்ட குளிர்ந்த வானிலை கொண்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வோம். அதுபோன்று, நீங்கள் சுற்றுலா செல்ல புறப்பட்டால் புதிய பாலியல் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அது உங்கள் திருமண உறவுக்கு புதுமையாக இருக்கும். இதன்மூலம் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பும் ஆசையும் அதிகரிக்கும். இம்முயற்சி திருமண உறவை பலம் குன்றாமல் வைத்திருக்க உதவும்.

பிறப்புறுப்பு பக்கத்துல அதை மட்டும் செய்ய வேண்டாமே- பெண்களே பிளீஸ்..!!

காலையில் காதலும் காமமும்

பொதுவாக திருமணமான தம்பதிகள் காலையில் உடலுறவில் ஈடுபடுவது நன்மை தருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலையில் நடக்கும் உடலுறவின் மூலம், உங்களுடைய நாள் உற்சாகம் கொண்டதாக இருக்கும். அதேபோன்று ஆற்றலும் அதிகரிக்கும். இதன்மூலம் உங்களுடைய நாள் சிறப்பானதாகவும் மகிழ்ச்சி கொண்டதாகவும் அமையும். 
 

Latest Videos

click me!