Image: Getty Images
பல் சுகாதாரம் மோசமாக இருந்தால் மட்டுமே, ஈறுகளில் இரத்தப்போக்கு அல்லது வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு ஆப்பிளை கடிக்கும் போது ஈறுகளில் ரத்தம் வரும். மற்றவர்களுக்கு பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வரும். இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம். ஈறுகளில் இரத்தப்போக்கு பல காரணங்களுக்காக ஏற்படுகிறது. கிருமிகள் காரணமாக, ஈறுகளில் சீழ் உருவாகிறது மற்றும் இது இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். உங்களுக்கு ஒருவேளை வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே குறைபாடு இருந்தாலும் இந்த பிரச்னை நிகழலாம்.
அதுமட்டுமில்லாமல் புகையிலையை அதிகமாக பயன்படுத்துவதால் ஈறுகளில் ரத்தம் கசியும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் ஈறுகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, தவறான உணவுப் பழக்கங்களும் ஈறுகளில் ரத்தம் கசிவதற்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் வலுவான பற்கள் இருக்கவேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
பற்கள் சுகாதாரம் முக்கியம்
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்குவது அவசியம். இருப்பினும், நம்மில் பலர் இரவில் பல் துலக்குவதைத் தவிர்க்கிறோம். படுக்கைக்கு முன் பல் துலக்குவது, நாள் முழுவதும் படிந்திருக்கும் நுண்ணுயிர்களை நீக்கிவிடுகிறது.
நாக்கு சுத்தம் செய்வது கட்டாயம்
வாய் ஆரோக்கியம் என்பது நாக்கை உள்ளடக்கியது தான். நீங்கள் நாக்கில் படியும் மாவை முறையாக சுத்தம் செய்யவில்லை என்றால், பல்வேறு வாய் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் பல் துலக்கும் போது, அதிகப்படியான பாக்டீரியாக்கள் உருவாகாமல் இருக்க உங்கள் நாக்கை அடிக்கடி கிளீனரைக் கொண்டு சுத்தம் செய்வது முக்கியமாகும்.
ஃப்ளோஸிங்
இந்த பெயர் பெரும்பாலானோருக்கு புதியதாக இருக்கும். னால் வாய்வழி சுகாதாரத்திற்கு இது மிகவும் முக்கியமான செயல்முறையாகும். ஃப்ளோஸிங் செய்வதன் மூலம் நமது பற்களுக்கு இடையில் சிக்கக்கூடிய சிறிய உணவுத் துகள்கள் அகன்றுவிடும். உணவில் சிக்கியுள்ள துகள்களை அகற்ற ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஃப்ளோஸ் செய்வது முக்கியமாகும்.
கோடைக் காலம் வரப்போகிறது- இளநீர் பற்றி தெரிந்துகொள்வோமா..??
சக்கரை பொருட்கள் வேண்டாம்
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் அல்லது பானங்களை சாப்பிடுவதால் உங்கள் பற்கள் சேதமடையக் கூடும். அத்தகைய உணவுப் பொருட்களை உட்கொள்வதை நாம் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். அதனால் அவ்வப்போது வாயை நன்கு சுத்தப்படுத்துவது முக்கியம், முடிந்தால் துலக்கும் போது கவனமாக இருப்பது முக்கியம்.
மவுத்வாஷ் செய்வது பலனளிக்கும்
மவுத்வாஷ் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாய் துர்நாற்றத்தைத் தடுக்கவும், பாக்டீரியாவை அழிக்கவும் அவ்வப்போது மவுத்வாஷை உபயோகித்து வாயை சுத்தம் செய்யலாம்.