பிறப்புறுப்பு பக்கத்துல அதை மட்டும் செய்ய வேண்டாமே- பெண்களே பிளீஸ்..!!

First Published | Mar 3, 2023, 12:24 PM IST

பிக்கீனி வேக்சிங் என்பது தற்போதைய டிரெண்ட் மட்டும் தான். இதனால் பெண்களுடைய பிறப்புறுப்பு பகுதி சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மேலும் அந்த பகுதியைச் சுற்றி முடி படர்ந்திருப்பது தான் பாதுகாப்பு என்று கூறுகின்றனர். 

vaginal hygiene

பிறப்புறுப்பை சுற்றியுள்ள முடியினை அகற்றுவதற்கு, பெரும்பாலான பெண்கள் பிக்கீனி  செய்கின்றனர். இது அழகுக் கலை மொழியில் பிக்கீனி வேக்சிங் என்று கூறப்படுகிறது. இதனால் தங்களுடைய பிறப்புறுப்பு அமைந்துள்ள பகுதி சுத்தமாக இருக்கும் என்றும், எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று அவர்கள் கருதுகின்றனர். ஆனால் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் மருத்துவ ஆய்வாளர்கள், பிக்கீனி வேக்சிங் என்பது தற்போதைய டிரெண்ட் மட்டும் தான். இதனால் பெண்களுடைய பிறப்புறுப்பு பகுதி சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மேலும் அந்த பகுதியைச் சுற்றி முடி படர்ந்திருப்பது தான் பாதுகாப்பு என்று கூறுகின்றனர்.  முன்னதாக பெண்கள் பலர் தங்களுடைய உறுப்பு பகுதியை சுற்றி இருக்கும் முடியை ஷேவிங் செய்து அகற்றி வந்தனர், இப்போது இந்த பழக்கம் பிக்கீனீ வேக்சிங் என்கிற முறைக்கு மாறியுள்ளது. இதை பல்வேறு அழகுக்கலை நிலையங்கள் மேற்கொள்கின்றன. அதற்கான கட்டணமும் பெரியளவில் வசூலிக்கப்படுகிறது.

vaginal health

பிக்கீனி வேக்ஸ் என்றால் என்ன?

பிறப்புறுப்பை சுற்றியுள்ள முடியினை, மெழுகு போன்ற உருகிய திரவம் கொண்டு அகற்றுவது தான் பிக்கீனி வேக்ஸ். இப்படி செய்யும் போது, பெண்கள் கடற்கரை அல்லது குளங்களில் நிச்சல் உடை அணியும் போது, எந்தவிதமான முடியும் வெளியே தெரியாது. பிறப்புறுப்பு சுற்றியுள்ள பகுதி மிகவும் மென்மையானது. அந்த பகுதியில் மெழுகை வைத்து தடவி, ‘சடார்’ என முடியினை அகற்றும் போது மிகுந்த வலி ஏற்படும். இந்த பழக்கம் இளம் தலைமுறையினரிடையே அதிகம் காணப்பட்டாலும், வயதான பெண்கள் கூட சிலர் பிக்கீனி வேக்சிங்கை செய்துகொள்கின்றனர். 

Tap to resize

பிறப்புறுப்பை சுற்றியுள்ள முடியை நீக்க வேண்டுமா?

உண்மையில் பெண்களின் பிறப்புறுப்பை சுற்றியுள்ள முடி தான், அவர்களுக்கு தொற்று எதுவும் ஏற்படாமல் காக்கிறது. பெண்களின் இடுப்புக் கீழேயும் மற்றும் பிறப்புறுப்பு அமைந்துள்ள பகுதியிலும் பல முக்கிய நுண்ணுயிர்கள் உள்ளன. இவை தான் பிறப்புறுப்பு அரணாக இருந்து, எந்தவிதமான நோய் பாதிப்பு ஏற்படாமல் காத்து வருகிறது. நீங்கள் சேவிங் அல்லது வேக்ஸிங் கொண்டு முடியை அகற்றும் போது, பிறுப்புக்கான கவசம் காணாமல் போய்விடும். இதனால் எளிதாக பாக்டீரியாக்கள் அல்லது நுண்ணுயிர் தொற்று பிறுப்புறுப்பை தாக்கக்கூடும். இதனால் பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

பிறப்புறுப்பு பகுதியில் க்ரீம் பயன்படுத்தலாமா?

சேவிங், வேக்ஸிங் மட்டுமின்றி பிறுப்புறுப்பு பகுதியில் இருக்கும் முடியை நீக்குவதற்கு பல்வேறு க்ரீம்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் மிகுந்த ஆபத்தான செயல்பாடாகும். இதுகுறித்து அந்தந்த க்ரீம்களில் எழுதப்பட்டு இருக்கும். நீங்கள் தொடர்ந்து க்ரீம்களை பயன்படுத்தி, முடிகளை நீக்கி வந்தால் வேதியியல் வினைகள் ஏற்பட்டு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும். 

வயது மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஈர்ப்பு ஏற்பட இதுதான் காரணம்..!!

அப்போது பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி இருக்கும் முடியை என்ன செய்வது?

எந்தவிதமான வேதியல் சார்ந்த செயல்பாடுகளும் சருமத்துக்கும் பிறப்புறுப்பு பகுதிக்கும் தீங்கினை மட்டுமே வரவழைக்கும்.  நீங்கள் வெறும் தண்ணீர் மற்றும் உடலுக்கு போட்டு குளிக்கும் சோப்பு கொண்டு சேவிங் செய்வதிலும் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. தொடர்ந்து அந்த மென்மையான இடத்தை சேவிங் செய்து வந்தால், கொப்பளங்கள் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். அதனால்  கத்திரிக்கோலை வைத்து முடியின் அளவை குறைப்பது மட்டுமே சரியான வழிமுறையாகும். இதனால் பிறப்புறுப்பு பகுதியும் பாதுகாப்பாக இருக்கும், எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது. 

பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்யாமல் இருந்து விடலாமா?

இவ்வளவு பிரச்னை இருப்பதால், பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்யாமல் இருந்துவிடலாமா? என்று கேட்டால், அதுவும் ஆபத்து தான் என்கின்றனர் சரும நிபுணர்கள். குளிக்கும் போது பிறப்புறுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும், அவ்வப்போது கத்திரிக்கோலை வைத்து முடியை சரியாக வெட்ட வேண்டும், மாதவிடாய் காலங்களில் குறித்த நேரத்தில் அணையாடைகளை மாற்றிவிட வேண்டும், ஈராமான உள்ளாடை அணிவதையும் தவிர்க்க வேண்டும். 

கோடைக் காலம் வரப்போகிறது- இளநீர் பற்றி தெரிந்துகொள்வோமா..??

இண்டிமேட் வாசிங் பாதுகாப்பானதா?

பிறப்புறுப்புக்கான சுத்தம் செய்யும் செயல்பாட்டில், பிக்கீனி வேக்சிங்குக்கு இணையாக, பல அழகு நிலையங்களில் இண்டிமேட் வாசிங் என்கிற மற்றொரு முறையும் பயன்பாட்டில் உள்ளது. பிறப்புறுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முகத்துக்கு செய்வது போன்ற ஃபேஷியல், முடி நீக்குவது, நிறத்தை மாற்றுவது, அந்த இடத்துக்கு பளீச் என்கிற தோற்றத்தை தருவது உள்ளிட்டவை தான் இண்டிமேட் வாசிங். இதன்காரணமாகவும் பிறப்புறுப்பு வறண்டு போதல், தொற்று ஏற்படுதல் உள்ளிட்ட பிரச்னைகள் நிகழும் மற்றும் பிறப்புறுப்பின் உட்பகுதியில் இருக்கும் பிஎச் அளவு அமிலம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.  

பிறப்புறுப்பு பகுதியில் முடி எதுவும்  இருக்கக்கூடாது என்று ஏன் பெண்கள் எண்ணுகின்றனர்? இதுதொடர்பான கேள்விக்கு ஆபாசப் படங்கள் தான் காரணம் என்பதே பதிலாக இருக்க முடியும். அதில் வரும் பெண்களின் தோற்றத்தால் இளம் ஆண்கள் தாக்கத்துக்கு உள்ளாகுகின்றனர். அதை தங்களுடைய காதலி, மனைவி உள்ளிட்டவர்களிடமும் எதிர்பார்க்கின்றனர். அதன்காரணமாகவே பெண்கள் பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் முடியை நீக்க முயலுகின்றனர்

Latest Videos

click me!