உங்க சிறுநீரை கவனிக்காம விடாதீங்க! சிறுநீரில் இந்த மாற்றம் இருந்தால், சிறுநீரகப்பை கேன்சர் இருக்கலாம்..!

First Published | Apr 14, 2023, 2:15 PM IST

உண்மையில் நமது சிறுநீர் பல நோய்களைக் குறிக்கிறது. அதன் நிறத்தை வைத்தே நமக்கு என்ன வகையான நோய்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். 

சிறுநீர்ப்பை புற்றுநோய் (Bladder Cancer) என்றால் சிறுநீர்ப்பையின் தோலில் உள்ள அசாதாரண திசுக்களின் வளர்ச்சியாகும். ஆக்‌ஷம் ப்ளாடர் கேன்சர் (Action Bladder Cancer UK) கருத்துப்படி, இந்த புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் 80 சதவீதம் இந்த நோயில் இருந்து முற்றிலும் விடுபடும் வாய்ப்புள்ளது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த புற்றுநோயில் 25 சதவீதம் பிந்தைய கட்டத்தில் தான் கண்டறியப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் பல அறிகுறிகளை வெளியேகாட்டாது. இந்த சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.  

ஆய்வுகளின்படி, சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது நல்லதல்ல. இப்படி ரத்தம் கசிந்தால் உங்களுக்கு உடல்நலக் கோளாறுகள் இருப்பதாக அர்த்தம். குறிப்பாக சிறுநீர்ப்பையில் பாதிப்பு இருந்தால் தான் இந்த பிரச்சனை வரும். இந்த இரத்தம் சில நேரங்களில் இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு, பழுப்பு நிறத்தில் வெளியேறும். இது வலியற்றது. இது சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறியாகும். 

Tap to resize

சிறுநீரில் இரத்தத்தின் பிற காரணங்கள்

சிறுநீரில் இரத்தம் வந்தாலே, உங்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் என்று அர்த்தமல்ல. ஏனெனில் இது பல பிரச்சனைகளால் ஏற்படலாம். ஆண்களுக்கு பொறுத்தவரை, சிறுநீர் பாதை தொற்று, சிறுநீர்ப்பையில் கற்கள், புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவையும் சிறுநீரில் இரத்தத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இந்தப் பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 

சிறுநீர்ப்பை புற்றுநோய் அறிகுறிகள்

சிறுநீர்ப்பை புற்றுநோய் இருந்தால், சிறுநீரில் இரத்தம் கலந்திருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். சிறுநீர் கழிக்க திடீர் தூண்டுதல் ஏற்படும். சிறுநீர் கழிக்கும் போது எரிதல், அடிவயிற்றில் அல்லது முதுகில் வலி, சோர்வு, பசியின்மை, எலும்பு வலி போன்ற அறிகுறிகளும் காணப்படுகின்றன. 

சிறுநீர்ப்பை புற்றுநோய் அபாயம் 

அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் தகவல்களின்படி, புகைபிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இதனால் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம். சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்தை குறைக்க தண்ணீர் முறையாக அருந்த வேண்டும். நாள்தோறும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். பழங்கள், காய்கறிகளை சாப்பிடுங்கள். இவை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் இந்த 1 காரியம் மறக்காம செய்யுங்க! அள்ள அள்ள குறையாமல்... வீட்டில் செல்வம் பெருகுமே!!!

ஒருவேளை புற்றுநோய் செல்கள் புறணியை தாண்டி சிறுநீர்ப்பை தசைகளிலும் பரவினால், அது தசை ஊடுருவும் சிறுநீர்ப்பை புற்றுநோய் என சொல்லப்படுகிறது. எலும்பு வலி என்பது புற்றுநோய் செல்கள் உங்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருப்பதற்கான அறிகுறியாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

இதையும் படிங்க: நகங்களின் நிறத்தை என்ன நினைச்சிங்க! அதை வைத்தே உங்க ஆரோக்கியத்தை சொல்லலாம்.. உங்க நகம் எப்படி இருக்கு பாருங்க!

Latest Videos

click me!