தேங்காய் எண்ணெயில இதை சேத்து தடவினா இளநரை,பொடுகு,முடி உதிர்வுக்கு பாய் சொல்லி,முடிவளர்ச்சிக்கு ஹாய் சொல்லுங்க

First Published | Apr 13, 2023, 9:13 PM IST

Hair Tips :இயற்கையாக எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளை அரைத்து அதனை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தினமும் தலைக்கு தடவுவதை வழக்கமாக்கிக் கொண்டால் , முடி சம்மந்தமான பல பிரச்சனைகள் முடிவிற்கு வந்து விடும். அப்படியான மூலிகைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி இப்போதுள்ள இளம் தலைமுறையினரில் பலருக்கும் முடி சம்பந்தமான பல பிரச்சனைகள் உள்ளன. முடி உதிர்வு, பொடுகு, இளநரை, வறட்சியான கூந்தல் என்று கூந்தல் சம்மந்தமான பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக முடி கொட்டுதல் பிரச்சனைக்கு பலரும் ட்ரை செய்யாதவை என்று எதுவும் இருக்காது. மார்க்கெட்களில் கிடைக்கும் ரசாயன கலவைகளை உபயோகித்து, புதிய பிரச்சனைகளை விலைக்கு வாங்கி தவிப்பவர்களும் இருப்பார்கள். 

ஆனால், இயற்கையாக எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகைகளை அரைத்து அதனை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தினமும் தலைக்கு தடவுவதை வழக்கமாக்கிக் கொண்டால், முடி சம்மந்தமான பல பிரச்சனைகள் முடிவிற்கு வந்து விடும். அப்படியான மூலிகைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

வேப்பிலை:

வேப்பிலையில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளதால் முடியில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்துகிறது. அதோடு உச்சந் தலையில் இரத்த ஓட்டத்த்தை சீராக்கி தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் கொழுப்பு அமிலங்களும் ஊட்டச்சத்துகளும் பொடுகு பிரச்சனை, கூந்தலின் நுனிகளில் காணப்படும் பிளவு வெடிப்பு, மெல்லிய தலையில் இருக்கும் பொடுகு, பேன், ஆயில் மசாஜ் என அனைத்துக்கும் இந்த எண்ணெய் பயன்படுத்தலாம்.

வேப்பிலை, முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் தன்மை பெற்றது. தவிர முடி உதிர்வை குறைக்கும் ஆற்றலையும் பெற்றது. வேப்பிலையின் கசப்பு தன்மையினால் தலையில் இருக்கும் பாக்டீரியா போன்ற தலைமுடிக்குத் தீங்கு விளைவிக்கும் நுண்ணியிரிகளான பொடுகு பிரச்னையை மிக விரைவில் கட்டுப்படுத்துகிறது. அதோடு கூந்தல் வளர்ப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Tap to resize

கறிவேப்பிலை:

கறிவேப்பிலையில் புரதம், வைட்டமின்,இரும்பு சத்து மட்டும் பீட்டா-கரோடின் அதிகமாக இருப்பதால் இது முடி உதிர்வை கட்டுப்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. மேலும் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தினை கொடுத்து முடியை அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளர செய்யும்.

முடி கொட்டுவதற்கு மிக முக்கிய காரணமெனில் தலைமுடி டிரையாக இருப்பதால் தான். தவிர தலையில் ஏற்படும் இன்ஃபெக்சன்கள் ,கொப்புளங்கள், பேன், ஈர், பொடுகு போன்ற பிரச்சனைகளாலும் பலருக்கும் முடி கொட்டும். ஒரு சிலருக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் முடி வளராமல் இருக்கும். முடி வளராமல் இருக்கும் முடி கூட கொட்டிக் கொண்டே இருக்கும்.

மருதாணி :

மருதாணி இலைகள் கூந்தலின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கினை தருகிறது. அதிலும் குறிப்பாக இளநரை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். மருதாணி முடிக்கு தேவையான ஊட்டச்சத்தினை கொண்டதால் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் பணியை சிறக்க செய்கிறது.

இதில் அதிகளவு பாக்டீரியா எதிர்க்கும் பண்பு கொண்டதால் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் கூந்தலில் காணப்படும் பொடுகு தொல்லை குறைந்து, கூந்தல் வளர்ச்சியும் பெறுகிறது. இளநரை / செம்பட்டை காணப்படும் முடியினை கருமையாக மாற்றும் . 

எப்படி பயன்படுத்துவது :

கறிவேப்பிலை, மருதாணி மற்றும் வேப்பிலையை சம அளவில் எடுத்து நிலையில் உலர்த்தி பின் அதனை பவுடர் போன்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொடியை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து தினமும் தடவி வர கருப்பான மற்றும் நீளமான கூந்தல் நிச்சயம்!

Summer Tips:கொளுத்தும் வெயிலிலும் உங்க முகத்தை பளபளன்னு,ஜொலிக்க வைக்க இந்த குளு குளு ஃபேஸ் பேக் போடுங்க

Latest Videos

click me!