வயது மூத்த பெண்கள் மீது ஆண்கள் ஏன் மோகம் கொள்கிறார்கள்?

First Published | Apr 13, 2023, 5:30 PM IST

Relationship Tips: வயது மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஏன் ஈர்ப்பு வருகிறது என்பதை அறிவீர்களா? இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு. 

பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் ஆகட்டும், ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சன் ஆகட்டும், தங்களை விட வயது மூத்த பெண்களை தான் மணந்துள்ளனர். பெரும்பாலான ஆண்களுக்கு தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களை பிடித்திருக்கிறது. பாரம்பரியமாக வயது குறைந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதே இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இப்போது அதை சிலர் மாற்றி வருகின்றனர். ஏன் வயது அதிகமுள்ள பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு இங்கு சில காரணங்களை காணலாம். 

வயது அதிகமான பெண்கள் சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக மாறிவிடுகிறார்கள். பிரச்சினைகளை எப்படி சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் அறிந்துள்ளார்கள். வயது அதிகமுள்ள பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கின்றனர். அதுவும் ஒரு காரணம் என சில ஆண்கள் ஒப்பு கொள்கின்றனர். 


பெண்கள் தங்களை விட வயது குறைந்த ஆண்களிடம் ஈர்க்கப்படுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இங்கு அவர்களால் தங்களுடைய ஆளுமையை வெளிகாட்ட முடிகிறது. தங்களை முழுமையாக அரவணைத்து கொள்ளும் பெண்களை ஆண்களும் விரும்புகிறார்கள். இளம்பெண்களை விட வயதில் மூத்த பெண்கள் ஆண்களுடன் விரைவில் நெருங்கிப் பழக முடியும் என்பதும் ஒரு காரணம். 

இதையும் படிங்க: செக்ஸ் உறவுக்கு முன்னும், பின்னும் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் செய்யக்கூடாதாம்!!

வயதில் மூத்த பெண்களுக்கு, இளைய ஆண்களை விட அதிக வாழ்க்கை அனுபவம் உள்ளது. அதனால் சில பிரச்சனைகளை அவர்கள் எளிதில் கையாளுகின்றனர். இதுவும் ஈர்ப்புக்கு காரணமாக உள்ளது. வயது மூத்த பெண்களில் சிலருக்கு நிதி புழக்கம் அதிகம் இருக்கும். பொருளாதார ஆதரவளிப்பதால் சில ஆண்கள் அவர்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். 

வயது மூத்த பெண்களுக்கு தான் உணர்வுரீதியான புரிதல் அதிகமாக இருக்கிறது என ஆண்கள் நினைத்து கொள்கின்றனர். அதனாலும் அங்கு ஈர்ப்பு அதிகம் இருக்கிறது. சில ஆண்கள், "பெண்கள் 30 வயதுக்குள் தான் மொத்த அழகையும் பெறுவதாகவும் அதுவே ஈர்ப்பு காரணம்" என்றும் சொல்கின்றனர். அழகையும் பணத்தையும் கழித்துவிட்டாலும் உணர்வுரீதியான அரவணைப்பு ஆண்களை வயது மூத்த பெண்களிடம் கட்டிப் போட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஆண்கள் செக்ஸ் வேண்டாம்னு சொல்ல இதுதான் காரணமா? அவங்க பாலுணர்வை இழந்துவிட்டால் அப்புறம் ஒன்னுமேயில்ல!!

Latest Videos

click me!