ஆண்கள் செக்ஸ் வேண்டாம்னு சொல்ல இதுதான் காரணமா? அவங்க பாலுணர்வை இழந்துவிட்டால் அப்புறம் ஒன்னுமேயில்ல!!
செக்ஸ் வேண்டாம் என சொல்வது பெண்ணின் உரிமை மட்டுமல்ல, ஆணின் உரிமையும் கூட. ஆண்கள் உடலுறவு வேண்டாம் என சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் 6 காரணங்களை இங்கு காணலாம்.
சோர்வு அல்லது மன அழுத்தம் இருக்கும் ஆண்கள் உடலுறவில் ஈடுபாடு காட்டுவதில்லை. மனைவி அருகே வந்தாலும் புரண்டு படுத்து கொள்வார்கள். வேலை, குடும்பக் கடமைகள், மற்ற மன அழுத்த பிரச்சனைகள் ஆண்களுக்கு உடல் அல்லது உணர்ச்சி ரீதியான சோர்வை கொடுக்கலாம். இதனால் பாலுணர்வு பாதிக்கிறது. உடலுறவில் ஆர்வம் இழக்கிறார்கள். மன அழுத்தம் சோர்வு இரண்டுக்கும் தீர்வு காணாமல் விட்டால் செக்ஸ் என்ற வார்த்தை கூட அலர்ஜி ஆகிவிடும். எச்சரிக்கை ஆண்களே!
ஆண்கள் செக்ஸ் வேண்டாம் என ஒதுங்குவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, தங்களுடைய துணையின் மீது ஆர்வமும் ஈர்ப்பும் இல்லாதது தான். நாளடைவில் ஆண்களுக்குத் தங்கள் துணையிடம் உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சிப்பூர்வமாகவோ ஈர்ப்பு குறைந்துவிடும். இதற்கு உறவில் புதுமையான விஷயங்கள் இல்லாததும் ஒரு காரணம். துணையின் மீது ஈடுபாடு இல்லாத ஆண்களின் பாலுணர்வு குறைகிறது. செக்ஸும் கொஞ்சம் அலுத்துவிடுகிறது.
ஆண்கள், தங்களுடைய துணையுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பதை உறுதி செய்யாமல் இருப்பது பாலுணர்வை குறைக்கும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வருவது இயல்பு. ஆனால் தீர்க்கப்படாத மோதல்கள் அல்லது சிக்கல்களால் உடலுறவில் ஆர்வம் குறையும். கருத்து மோதல்கள், நம்பிக்கையின்மை, போதிய உரையாடல் இல்லாமை, நிதி பிரச்சனை என எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீர்வு காண வேண்டும். உணர்வுரீதியாக இடைவெளி வந்தால் உடல்ரீதியாக இணைய முடியாது.
நீங்கள் உண்ணும் சில மருந்து மாத்திரைகள் உடலுறவில் ஈடுபாட்டை குறைக்கலாம். மனச்சோர்வு அல்லது பதற்றத்தை சந்திக்கும் ஆண்களுக்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் காரணமாக பாலுணர்வு குறையலாம். விறைப்புத்தன்மை அல்லது முன்கூட்டிய விந்து வெளியேற்றம் ஆகிய உடல் நலப் பிரச்சினைகளை சந்தித்தால் ஆண்கள் தளர்ந்துவிடுவார்கள். அதன் காரணமாக பாலியல் செயல்பாடுகளைத் தவிர்க்கலாம்.
இதையும் படிங்க: வயது மூத்த ஆண்களை திருமணம் செய்வதால் என்ன ஆகும் தெரியுமா?பெண்களின் பகீர் அனுபவங்கள்! இப்ப யோசிச்சு என்ன செய்ய!
சில ஆண்கள் திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்தை மீறிய உடலுறவை மனதளவில் தவறு என்று எண்ணலாம். அது அவர்களின் மத நம்பிக்கையாக கூட இருக்கலாம். அதனால் உங்களிடம் நெருங்காமல் இருக்கலாம்.
கடந்த காலத்தில் நடந்த பாலியல் அத்துமீறல் அல்லது அப்படியான பாலியல் சீண்டல்களையும் மற்ற கொடூரமான விஷயங்களையும் அனுபவித்த ஆண்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில் சிரமப்படுவார்கள். அந்த வேதனையை சமாளிப்பதற்கான ஒரு வழியாக உடலுறவையே முற்றிலும் தவிர்க்கலாம்.
இதையும் படிங்க: செக்ஸ் உறவுக்கு முன்னும், பின்னும் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் செய்யக்கூடாதாம்!!