Winter Coffee Health : பிளாக் காபி vs பால் காபி : குளிர்காலத்துல எது ஆரோக்கியத்திற்கு பெஸ்ட்!

Published : Nov 24, 2025, 11:08 AM IST

குளிர்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவ கால தொற்றுக்களுக்கு பிளாக் காபி அல்லது பால் சேர்ந்த காபி குடிப்பது எது ஆரோக்கியத்திற்கு பெஸ்ட் என இங்கு பார்க்கலாம்.

PREV
14
Winter Coffee Health

குளிர்காலம் தொடங்கியாச்சு. பெரும்பாலானோர் இந்த சீசனில் காலை எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் தங்களது நாளை தொடங்குவதில்லை. இது உடலை சூடாக வைத்திருப்பது மட்டுமில்லாமல், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க ஊக்கத்தை தருகிறது.

இருப்பினும் சிலர் வெறும் ப்ளாக் காபியும், இன்னும் சிலரோ பால் கலந்த காபியும் குடிக்க விரும்புகின்றனர். இவை இரண்டும் சில நன்மைகளை வழங்கினாலும், குளிர் காலத்தில் இந்த இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு பெஸ்ட் என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. இதற்கான பதிலை இப்போது இங்கு பார்க்கலாம்.

24
பால் காபி நன்மைகள்

- பால் காபி அமிலத்தன்மையை சமநிலைப்படுத்த உதவும். குறிப்பாக வயிற்று எரிச்சல் செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது நல்லது.

- பாலில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

- பால் காபியில் இருக்கும் பால் காஃபின் உறிஞ்சிதலை மெதுவாக்கும். இது சிலருக்கு ஏற்படும் பதட்டத்தை குறைக்கும் மற்றும் வயிற்றுக்கு மென்மையானதாகவும் இருக்கும்.

- பால் காபி உடலுக்கு நீண்ட நேரம் நீடிக்கும் ஆற்றலை வழங்குகின்றது.

34
பிளாக் காபி நன்மைகள் :

- பிளாக் காபியில் கலோரிகள் மிகவும் குறைவாகவே உள்ளதால், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.

- குளிர்காலத்தில் உடலில் சூட்டை அதிகரிக்கவும், மந்தமான மனநிலையை தவிர்க்கவும் உதவுகிறது.

- இதில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும். மேலும் புற்று நோய், இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

- இதில் இருக்கும் காஃபியின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, கவனத்தை அதிகரிக்க உதவுகிறது.

44
எது பெஸ்ட்?

- குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பொறுத்தவரை பிளாக் காபி தான் சிறந்தது. ஏனெனில் இதில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

- குளிர்காலத்தில் பால் கலந்த காபி குடித்தால் இருமல், சளி, உடலில் வீக்கத்தை அதிகரிக்கும். மேலும் தொண்டை புண், எரிச்சலுக்கும் வழிவகுக்கும்.

- குளிர்காலத்தில் காபி குடிப்பது நல்லது என்றாலும் அதிகமாக குடித்தால் அமிலத்தன்மை, தூக்கமின்மை, பதற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories