இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் பலரும் பலவிதமான உடல்நல பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக இளம் வயதினரே இதய ஆரோக்கியத்தால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை பழக்கங்கள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவை தான் இதய நோய் அபாயத்தை அதிகரிக்க செய்கின்றனர். ஆனால் வழக்கமான உடற் பயிற்சிகள் செய்வதன் மூலம் கெட்ட கொழுப்பை குறைக்கலாம், நல்ல கொழுப்பை அதிகரிக்கலாம், ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்காக வைக்கலாம். ஏனெனில் இவை அனைத்தும் தான் இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணியாகும். இதற்காக நீங்கள் சில எளிய உடற்பயிற்சியை உங்களது அன்றாட வாழ்க்கையில் இணைத்துக் கொள்வதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். சரி இப்போது இந்த பதிவில், இதயம் ஆரோக்கியமாக இருக்க 40 வயதுக்குட்பட்டவர்கள் தினமும் செய்ய வேண்டிய சில எளிமையான உடற்பயிற்சிகள் குறித்து பார்க்கலாம்.
26
1. வாக்கிங்
நீங்கள் தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் விறுவிறுப்பான நடை பயிற்சி செய்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். ஏனெனில், இது குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிக எளிதான பயிற்சியாகும். நடைப்பயிற்சியானது கலோரிகளை எரிக்கும் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இதய பிரச்சனைக்கு வழிவகுக்கும் மன அழுத்தத்தையும் குறைக்க பெரிதும் உதவுகிறது.
36
2. சைக்கிள் ஓட்டுதல் பயிற்சி
இது இதயத்திற்கு ஏற்ற ஏரோபிக் பயிற்சியாகும். இந்த பயிற்சியானது கால் மற்றும் இதய தசைகளை வலுப்படுத்தும் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தும். சைக்கிள் ஓட்டுதல் மூலம் முழங்கால்களில் மென்மையான உணர்வு கிடைக்கும். கொழுப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். இதனால் இதய ஆரோக்கியமாக இருக்கும்.
நீச்சல் பயிற்சியானது ஒட்டுமொத்த உடலுக்கும் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிகவும் சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இது இதய ஆரோக்கியம், நுரையீரல் ஆரோக்கியம் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் சகிப்புத்தன்மையை உருவாக்கும். உங்களுக்கு மூட்டு பிரச்சனை இருந்தால் அல்லது குறைந்த தீவிரமான கார்டியோ மாற்றம் தேவைப்படுகிறது என்றால் நீச்சல் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
56
4. படிக்கட்டு ஏறுதல்
படிக்கட்டுகளில் ஏறுதல் கால் தசைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் இதயத்துடிப்பை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. இதற்கு தினமும் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறுவது நன்மை பயக்கும்.
66
5. ஜாகிங்
நீங்கள் சிறந்த உடல் தகுதியுடன் இருந்தாலோ அல்லது உங்களது மூட்டுகள் ஆரோக்கியமாக இருந்தாலும் இந்த பயிற்சியை வாரத்திற்கு சில முறை செய்தால் இதய ஆரோக்கியம் பலப்படும். ஏனெனில் இந்த பயிற்சியானது ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கும் மற்றும் உடலில் ஆக்ஸிஜன் பயன்பாட்டை மேம்படுத்த பெரிதும் உதவும்.