இரவில் பட்டினியிருந்தால் எடை குறையாது; மாறாக, மறுநாள் பசி அதிகரித்து அதிகம் சாப்பிட நேரிடும். மாறாக, இரவில் சரியான உணவை உட்கொண்டால், நாம் தூங்கும் போது கூட உடலின் மெட்டபாலிசம் சிறப்பாகச் செயல்பட்டு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எளிதாக எரிக்கும்.
பன்னீரில் உள்ள 'கேசின்' (Casein) என்ற புரோட்டீன் மெதுவாக ஜீரணமாகும். இது இரவில் நள்ளிரவு பசியை (Midnight Cravings) தடுக்கும். எண்ணெயில் பொரிக்காமல், லேசாக தவா வில் டோஸ்ட் செய்த 100 கிராம் பன்னீர் அல்லது டோஃபுவுடன் கொஞ்சம் மிளகுத்தூள் தூவி சாப்பிடுங்கள். தூக்கத்திலும் தசை வளர்ச்சி பெற்று கொழுப்பு கரையும்!
26
சுடச்சுட 'காய்கறி சூப்'
இரவில் கனமான உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து (Fiber) நிறைந்த காய்கறி சூப் குடிப்பது செரிமானத்தை சீராக்கும். கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் போட்டு, சோள மாவு (Corn flour) சேர்க்காமல் 'கிளியர் சூப்' ஆக குடியுங்கள். இது உடலை ஹைட்ரேட்டடா வைப்பதுடன், மிகக் குறைந்த கலோரியைக் கொண்டது.
36
'முட்டையின் வெள்ளைக்கரு' ஆம்லெட்!
முட்டையின் வெள்ளைக்கருவில் தூய புரோட்டீன் மட்டுமே உள்ளது, கொழுப்பு இல்லை. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) தூண்டும். 2 அல்லது 3 முட்டைகளின் வெள்ளைக்கருவுடன் நிறைய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி சேர்த்து ஆயில் கம்மியா ஆம்லெட் அல்லது புர்ஜி (Scrambled egg) செய்து சாப்பிடுங்கள்.
பொதுவாக ஓட்ஸ் என்றாலே பாலும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுவோம், அது எடையை கூட்டிவிடும். ஆனால், அதை உப்பாக மாற்றினால் வெயிட் லாஸ் கேரண்டி! ஓட்ஸை தண்ணீரில் வேகவைத்து, கொஞ்சம் மோர், சீரகத்தூள், சின்ன வெங்காயம் சேர்த்து 'ஓட்ஸ் கஞ்சி'யாக குடியுங்கள். இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் எடையை வேகமாகக் குறைக்கும்.
56
பாதாம் மற்றும் வெதுவெதுப்பான பால்!
இரவில் சிலருக்கு சமைக்க மூட் இருக்காது. அப்போது பாலும் பாதாமுமே ஒரு முழுமையான டயட் உணவு தான். சர்க்கரை இல்லாத ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலுடன், 5-6 ஊறவைத்த பாதாம் பருப்புகளைச் சாப்பிடுங்கள். பாலில் உள்ள ட்ரிப்டோபான் (Tryptophan) நல்ல தூக்கத்தைத் தருவதுடன், உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கும்.
66
சாப்பிடும் டைம் முக்கியம்
நீங்கள் என்னதான் டயட் உணவைச் சாப்பிட்டாலும், சாப்பிட்ட உடனே படுத்தால் எடை குறையாது. இரவு 7.30 முதல் 8 மணிக்குள் உணவை முடித்து விடுங்கள். சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடங்கள் வீட்டைச் சுற்றி மெதுவாக உலா வாருங்கள் (Light Walk). இது நல்ல ரிசல்ட் தரும்.