கர்ப்ப காலத்தில் 'நாவல் பழம்' ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா? சாப்பிட்டால் இந்த பிரச்சினைகள் வராதாம்..

First Published | Aug 26, 2023, 11:53 AM IST

கர்ப்ப காலத்தில் பெண்கள் நாவல் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? 

ஒரு பெண் தாயாகும்போது,   அது அவளுக்கு மிக அழகான உணர்வு. ஏனென்றால் இந்த நேரத்தில் அவளது வாழ்க்கையில் பெறாத நிறைய சந்தோஷங்கள் இப்போது வரப் போகிறது. கர்ப்ப காலத்தில், தாயின் ஆரோக்கியத்துடன், பிறக்காத குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் சாப்பிடும் உணவுகள் முதல் குடிக்கும் பானங்கள் வரை சிறப்பு கவனம் தேவை.
 

கர்ப்பகால உணவு முறை முற்றிலும் வேறுபட்டது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்தில் தாய் முழுமையான ஊட்டச்சத்து பெற வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், நட்ஸ்கள் ஆகியவற்றுடன் சிலவற்றை குறிப்பாகச் சாப்பிட வேண்டும். அந்தவகையில், கர்ப்ப காலத்தில் நாவல் பழம் சாப்பிடுவது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவம் நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையென்றால், இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

Tap to resize

நன்மைகள்:
கர்ப்ப காலத்தில் கர்பிணி பெண்கள் நாவல் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது ஒரு சிறந்த கர்ப்பகால உணவாக கருதப்படுகிறது. பொதுவாக இந்த பழம்  நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண் சாப்பிட்டால், அது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. சொல்லப்போனால் இது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும்.

இதையும் படிங்க: Jamun Fruit: கல்லீரல் பிரச்சனையை சரி செய்யும் நாவல் பழம்...இன்னும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா..?

ஊட்டச்சத்துக்கள்:
நாவல் பழம் பார்ப்பதற்கு கருப்பாக இருக்கலாம், ஆனால் இந்த ஜூசி பழம் மிகவும் சத்தானது. நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன், இதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பல வகையான ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை எலும்புகளின் வலிமைக்கு அவசியமானவை. நாவல் பழம் நார்ச்சத்து நிறைந்தது. மேலும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைய தேவைப்படுகின்றன. இந்த தேவை நாவல் பழம் நுகர்வு மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் நாவல் பழம் ஏன் சாப்பிட வேண்டும்?
கர்ப்பிணிப் பெண்கள் நாவல் பழத்தில் கால்சியம் நிறைந்திருப்பதால் சாப்பிடுவது நல்லது. இது குழந்தையின் எலும்புகளை பலப்படுத்துகிறது. இதனுடன், 
இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். குறிப்பாக  உங்களுக்கு இரத்தத்தை அதிகரிப்பதில் சிக்கல் இருந்தால், கர்ப்ப காலத்திற்கு பின்னும் இந்த பழத்தை சாப்பிடலாம். பல சமயங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு அல்லது மாதவிடாய் காலங்களில் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இந்த சூழ்நிலையில் இந்த பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செரிமானத்தை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. 

இதையும் படிங்க:  Diabetes: நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் சூப்பர் விதை..இது தெரிஞ்சா இனி குப்பையில் தூக்கி எறிய மாட்டீங்க

இந்த பழம் சாப்பிடுவது மூலம் தாய் மற்றும் சேய் ஆரோக்கியமாக இருப்பார்கள். குறிப்பாக குழந்தையின் இதயம் வலுவாக இருக்கும். நாவல் பழத்தில்  ஃபோலிக் அமிலம், கொழுப்புகள், புரதம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. அதனால்தான் மருந்துவர்கள் கர்ப்பிணிகள் இதை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Latest Videos

click me!