வெந்நீரில் 1 சிட்டிகை காயப்பொடி.. இதைக் குடித்தால் எண்ணிலடங்கா நன்மைகள்!!

Published : Feb 11, 2025, 09:19 AM IST

Benefits Of Drinking Asafoetida Water : தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இங்கே.

PREV
16
வெந்நீரில் 1 சிட்டிகை காயப்பொடி.. இதைக் குடித்தால் எண்ணிலடங்கா நன்மைகள்!!
வெந்நீரில் 1 சிட்டிகை காயப்பொடி.. இதைக் குடித்தால் எண்ணிலடங்கா நன்மைகள்!!

பெருங்காயம் சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள். இது பல நூற்றாண்டுகளாகவே ஆயுர்வேதத்தில்  மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. பெருங்காயம் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் போன்ற பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

26
செரிமான அமைப்பை பலப்படுத்தும் :

பெருங்காயம் செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவித்து, உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

இரைப்பை பிரச்சினைகளை போக்கும்:

பெருங்காயத்தில் இருக்கும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் எதிர்ப்பு பண்புகள் வயிற்றில் தசைகளை ஆற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

36
மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் :

நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் பெருங்காய தண்ணீரை வெறும் வயிற்றில் குடியுங்கள். ஏனெனில் பெருங்காயம் குடல் இயக்கங்களை ஊக்குவித்து, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

பலவீனம் மற்றும் சோர்வில் இருந்து நிவாரணம் :

பெருங்காயத்தில் இருக்கும் பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி, பலவீனம் மற்றும் சோர்விலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

இதையும் படிங்க:  பெருங்காயம் எதிலிருந்து இருந்து கிடைக்கிறது தெரியுமா? அதன் நன்மைகள் இதோ..!!

46
சளி இருமல் மற்றும் தொண்டை வலிக்கு நல்லது :

பெருங்காயத்தில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது சளி இருமல் மற்றும் தொண்டைப்புண் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது:

பெருங்காயம் தண்ணீர் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து, எடை குறைக்க உதவுகிறது. பெருங்காயத் தண்ணீர் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

இதையும் படிங்க:   வாயு தொல்லையா..? ஒரு ஸ்பூன் பெருங்காயம் போதும்! இனி சத்தத்தால் சங்கடப்படமாட்டீங்க...

56
மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம்:

மாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி முதுகு வலி போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட பெருங்காய ஒரு நல்ல தேர்வாகும். இது ரத்தத்தை மெலிதாக்க உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக இயக்கும். இதனால் மாதவிட வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்:

பெருங்காயம் ரத்த சர்க்கரை அளவை குறிக்க உதவுகிறது. அதாவது இது கணைய செல்களைத் தூண்டி ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:

பெருங்காயத்தில் ரத்த உருளை தடுக்கும் சேர்மங்கள் இருப்பதால் இது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. 

66
பெருங்காயம் தண்ணீர் தயாரிப்பது எப்படி?

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதே தினமும் கலை வெறும் வயிற்றில் குடியுங்கள்.

நினைவில் கொள்:

- பெருங்காயம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்கள் பெருங்கையைத் தண்ணீர் குடிக்க வேண்டாம்.

- அளவுக்கு அதிகமாக பெருங்காய நீர் குடிப்பது வயிற்று உபாதை, புண்கள் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

- பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பெருங்காயத் தண்ணீர் குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

Read more Photos on
click me!

Recommended Stories