
யோகாசனங்கள் உடலுக்கு நெகிழ்வுத்தன்மை அளிப்பதோடு வலிமையை தருகிறது. அது மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் ஆற்றலும் யோகாவிற்கு உண்டு. தினமும் சில யோகாசனங்களை செய்து வந்தால் உங்களுடைய வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதனால் அதிகமான ஆற்றல் செலவிடப்பட்டு எடை குறைய வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எளிதில் எடையை குறைக்க உதவும் ஆசனங்களை பார்க்கலாம்.
இந்த ஆசனம் உடலில் உள்ள அனைத்து தசைகளையும் வலுப்படுத்த உதவுகிறது நீங்கள் சூரிய நமஸ்காரத்தை தினமும் செய்யும் போது ஒட்டுமொத்த உடலையும் பயிற்சியில் ஈடுபடுத்துகிறீர்கள். இந்த ஆசனம் இதயத் துடிப்பை அதிகரிக்கும். இதனை செய்யும்போது சுவாசத்தில் கவனம் கொள்ள வேண்டும். ஆழமான சுவாசத்துடன் செய்யும்போது உடலின் ஆக்ஸிஜன் நுகர்வு அதிகமாக இருக்கும். அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து எடையை குறைக்கும். இந்த ஆசனத்தின் ஒவ்வொரு படிநிலைகளும் ஒவ்வொரு பயிற்சியாகும். வெறுமனே சூரிய நமஸ்காரம் மட்டும் 20 முறை நீங்கள் செய்துவந்தால் கணிசமான அளவில் எடை குறைக்கலாம்.
உடலின் மையதசைகள், கைகள், கால்களை ஈடுபடுத்தும் ஆசனமாகும். இதை செய்யும்போது கவனம் அதிகரிக்கும். நீண்ட நேரம் இந்த ஆசனம் செய்தால் உடலுக்கு சமநிலை கிடைக்கும். தசையை வலுப்படுத்தும். இது உங்களுடைய கூன் தோற்றம் மாறி மிடுக்கான தோரணையை தரும் ஆசனமாகும்.
வீரபத்ராசனா I, II, III ஆகிய மூன்று நிலைகள் கீழ் உடல் வலிமையை (Lower body) அதிகரிக்க உதவுகிறது. மைய தசைகளை வலுவாக்குகின்றன. நீங்கள் ஓய்வெடுக்கும்போது கூட எடையை குறைக்க இந்த ஆசனம் உதவுகிறது. தசைகளுக்கு நல்ல பயிற்சி. வளர்சிதை மாற்றத்தை ஓய்விலும் அதிகரித்து எடையை குறைக்கிறது.
பாம்பு போன்று படமெடுத்து நிற்கும் வகையிலான இந்த யோகாசனம் முதுகை நன்கு வளைக்கும் பயிற்சியாகும். இதனால் வயிற்று தசைகளில் இயக்கம் அதிகமாக உள்ளது. செரிமானத்தை மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். முதுகு தசைகளை வலுப்படுத்தும் பயிற்சியாகும். மைய தசைகள் வலுவாக்குவதோடு தோரணையை மேம்படுத்தும்.
இந்த ஆசனத்தை டவுன் டாக் (down dog position) என்றும் சொல்வார்கள். கைகளை ஊன்றி தலையை கீழ்நோக்கி வைத்து நாய் போல நிற்கும் நிலையாகும். இதில் கைகள், தோள்கள், கால்கள், மைய தசைகள் ஈடுபடுகின்றன. உடலை வலுவாக்கி எடையை குறைக்க நல்ல பயிற்சியாகும்.
இதையும் படிங்க: ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 5 ஸ்லிம் சீக்ரெட்டை டிரை பண்ணுங்க
படகு போன்ற நிலையில் நிற்கும் இந்த போஸ் உங்களின் வயிற்று தசைகளை குறைக்க உதவும். தொப்பையை குறைக்க இந்த ஆசனம் நல்ல தேர்வாகும். படகு போன்ற போஸ் செய்யும்போது உடலின் மைய பகுதி இறுக உதவும். உங்களுடைய தோரணையை மாற்ற உதவுகிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: வெறும் வாக்கிங்ல எடையை குறைக்கனுமா? நடக்குறப்ப இந்த '1' ட்ரிக் பண்ணா போதும்!!
தலைகீழ் ஆசனமான இது தைராய்டு சுரப்பியைத் தூண்டக் கூடியது. வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதில் தைராய்டு சுரப்பி முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்று தசைகளுக்கு நல்ல பயிற்சி. செரிமானத்திற்கும் தூண்டப்பட்டு வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.
யோகாசனங்களை தினமும் செய்யும்போது உங்களுடைய எடை குறைப்பு பயணத்தில் நல்ல மாற்றங்களை காண முடியும். இவை எடை குறைக்க மட்டுமின்றி தசை வலிமை, இதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளையும் தருகின்றன. மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் இரண்டிற்குமே யோகாசனங்கள் நல்ல பலன்களை தரக்கூடியது. ஆனால் சரியான உணவு பழக்கமும், நிலைப்புத்தன்மையும் மட்டுமே பலன்களை பெற்றுத் தரும். வெறும் யோகாசனங்களால் முழு பலன்களையும் பெற முடியாது. அவற்றை சரியான நிலையில், வடிவத்தில் செய்வதும் அவசியம். இதற்கு முன் நீங்கள் யோகா பயிற்சி செய்ததில்லை எனிக் நன்கு யோகா தெரிந்த ஒருவரிடம் கற்றுக் கொள்ளுங்கள் அல்லது பயிற்சியாளரை அணுகுவது நல்லது.