தற்போதைய வாழ்க்கை முறையால் பலரும் முதுகெலும்பு பலவீனமடைந்து அவதிப்படுகிறார்கள். இந்த சமயத்தில் ஆரோக்கியமான உணவு மற்றும் குடிக்கும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது ரொம்பவே முக்கியம். இதனால் முதுகெலும்பு வலிமையாகும். இல்லையெனில் மோசமான நிலையை சந்திப்பீர்கள். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு இரவும் தூங்கும் போது முதுகெலும்பு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
27
அதிக புரதம் ;
அதிக புரதம் உள்ள உணவை சாப்பிட்டால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதன் விளைவாக உடலில் இருக்கும் எல்லா கால்சியமும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். இதனால் முதுகுவலி ஏற்படும். ஆகவே, மிதமான அளவில் புரதம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதிகப்படியான புரதம் எலும்பை சேதப்படுத்தும்.
37
கார்பனேற்றப்பட்ட பானங்கள் :
எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க கார்பனேற்றப்பட்ட பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த பானங்களில் அதிக பாஸ்பேட் உள்ளடக்கம் உடலில் கால்சியத்தை குறைக்கும். இதன் காரணமாக, எலும்புகள் பலவீனமடைந்து, முதுகுவலிக்கு வழிவகுக்கும்.
வாயு தொடர்பான மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் முதுகுவலி ஏற்படும். மேலும் இது கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களை உடலானது உறிஞ்சுவது மிகவும் சிரமமாக இருக்கும். இதனால் எலும்புகள் பலவீனமடையும்.
57
காஃபின் :
டீ, காபி போன்ற காஃபின் பானங்களை அதிகமாக குடித்தால் எலும்புகள் பலவீனமடையும். இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு கால்சியம் அதிகமாக தேவைப்படும்.
67
வைட்டமின் டி குறைப்பாடு :
உடலில் எலும்புகள் வலுவாக இருக்க வைட்டமின் டி மற்றும் கால்சியம் மிகவும் அவசியம். இவை இல்லையெனில் எலும்புகள் பலவீனமடையும். ஆகவே, எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
77
ஊட்டச்சத்து குறைப்பாடு :
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன், டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். வயது கூட கூட உங்களது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் அதிக கவனம் செலுத்துங்கள். இல்லையெனில், உடல் வலிகள் அதிகரிக்கும்.