ஒரே வாரத்தில் கூர்மையான கண் பார்வை.. துளியோண்டு பசு நெய் போதும்.. இப்படி பண்ணி பாருங்க!

First Published | Feb 8, 2023, 1:02 PM IST

ஆயுர்வேத முறைப்படி கண்களை பராமரிப்பது குறித்து இங்கு காணலாம். 

வீட்டில் இருந்தே வேலை செய்வது, நாள் முழுக்க ஓய்வில்லாமல் மொபைல் பார்ப்பது, சரியான தூக்கமின்மை ஆகியவை கண்களை பாதிக்கும். பல்வேறு குறைபாடுகளால் கண் பார்வை பாதிப்பு ஏற்படும். ஆனால் சில பிரச்சனைகளை இயற்கை வழிகளில் தீர்க்கலாம். கண்களில் பார்வை மேம்பட சில இயற்கை மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தலாம்.

ஆயுர்வேதம்படி, கண்களுக்கு திரிதோஷிக் உபயோகிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இதை செய்ய திரிபலாவை இரவில் நீரில் ஊற செய்ய வேண்டும். காலையில் அதை வடிகட்டி கண்களை 2 முறை கழுவி கொள்ளுங்கள். இதனால் கண்களில் அழுத்தத்தை குறையும். கண் பார்வை மேம்படும். 

Tap to resize

பாதாம், கருப்பு மிளகு, தேன் ஆகியவை கண்பார்வையை மேம்படுத்த உதவும். காலையில் எழுந்ததும் 2 முதல் 4 நொறுக்கப்பட்ட கருப்பு மிளகு, சூடான பால் ஆகியவை கலந்து, அதனுடன் 4 முதல் 5 ஊறவைத்த பாதாம்களை போட்டு அருந்தினால் பார்வையை மேம்படுத்தும்.

நாள்தோறும் 2 முதல் 5 தேக்கரண்டி நெல்லிக்காய் சாற்றை மிதமான சூடுள்ள நீரில் கலந்து அருந்தி வந்தால், கண் பார்வைக் குறைபாடுகளை ஓரளவு சமாளிக்கலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது.  

கண்பார்வையை மேம்படுத்த பாதபயங்கா செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அதாவது படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் பசு நெய் மூலம் உங்கள் பாதங்களை நன்கு மசாஜ் செய்யவேண்டும். 

Image: Getty Images

இருண்ட அறையில் மெழுகுவர்த்தி முன்னால் அமர்ந்து கொண்டோ அல்லது கொஞ்ச நேரம் ஒரே புள்ளியைப் பார்த்து உங்கள் பார்வையை மேம்படுத்தவோ தியானம் செய்யுங்கள். இதனை தராடாக் கர்மா என்கிறார்கள் (Tratak Karma). 

இந்த குறிப்புகளை கண் பார்வை மேம்படவும், கண்களின் அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுத்தவும். கண்களில் வேறு ஏதேனும் குறிப்பிட்ட பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். 

Latest Videos

click me!