ப்ரபோஸ் செய்யும்போது என்ன பரிசு கொடுக்கலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அதற்கு நடிகை ஆலியா பட், ரன்பீர் ப்ரபோசல் ஸ்டோரி உதவலாம். இவர்களின் காதலை உலகமே அறிந்தது. பாலிவுட்டின் காதல் பறவைகளான இந்த ஜோடியின் ப்ரபோஸ் ஸ்டைல் உங்களுக்கு உதவலாம். ரன்பீர் கபூர் அழகான மோதிரத்தை, அழகாக ஒரு முழங்காலை மடக்கி ஸ்டைலாக ஆலியாவுக்கு கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தினார். நீங்களும் உங்கள் துணைக்கு இப்படி மோதிரம் அளித்து ப்ரபோஸ் செய்து பார்க்கலாம்.