சலிக்காம தாம்பத்தியத்தில் கிக் இருக்கணுமா? இரவில் இந்த விஷயங்களை மட்டும் பண்ணி பாருங்க..

First Published | Feb 7, 2023, 4:11 PM IST

தாம்பத்திய வாழ்க்கையில் எதார்த்தமான உணர்வுகளோடு இணைந்தால் தான் நீண்ட காலம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். 

இல்லற வாழ்க்கையில் அன்பு, அக்கறை, உரையாடல், காதல் எல்லாம் நிரம்பி வழியும்போது, காமம் அங்கு எந்த சிக்கலும் இல்லாமல் வழிந்தோடும். காமத்துக்கு மரியாதை செய்வது காதல் செய்பவர்களால் தான் முடியும். அதற்கு உதவியாக சில டிப்ஸை இங்கு காணலாம். 

உடலுறவு கொள்வது வெறுமனே உடல்கள் இணைவது அல்ல. விருப்பமான நிலைகளில், விருப்பமான சூழ்நிலைகளில் காதலுடன் இணைவதை தான் முழுமையான உடலுறவு என்பார்கள். உடலுறவுக்கு தயாராகும் முன்பு உங்களுடைய துணையிடம் அது குறித்து உரையாடுங்கள். அவருக்கு எந்த பொசிஷன் விருப்பம், எவ்வளவு நேரம் உறவில் இருப்பதை விரும்புகிறார் போன்றவை தெரிந்து கொள்ள வேண்டும். 

Tap to resize

சினிமாத்தனமாக இல்லாமல் உங்கள் துணைக்கு எங்கு தொட்டால் உணர்ச்சி பொங்கும் என்பது அறிந்து தொட வேண்டும். குறிப்பாக எங்கே தொட்டால் பிடிக்காது என்பதை அறிய வேண்டும். சிலருக்கு உச்சம் அடைவதோ, இண்டர்கோர்ஸ் பண்ணுவதோ ஆர்வமாக இருக்காது. அதை புரிந்து கொண்டு அவருடன் பேசி உடலுறவின் மகத்துவத்தை இருவரும் சுவைக்கலாம். 

உடலுறவு குறித்த கற்பனைகள் இல்லாதவர்கள் இப்போதெல்லாம் குறைந்து வருகிறார்கள். அதற்காக பார்ன் படங்களைப் பார்த்து அதன்படி உடலுறவுக்கு தயாராகக் கூடாது. உங்கள் துணையோடு எப்படி உறவு கொண்டால் மகிழ்ச்சி பொங்கும் என்பதை புதிதாக கற்பனை செய்து, உங்களுக்கான செக்ஸ் பேண்டஸியை உருவாக்குங்கள். புதிய முறையால் இன்பம் பெருகினால் காமத்தில் உத்வேகம் பிறக்கும். 

Image: Getty Images

வெகுகாலம் இணைந்து இருக்கும் உறவில் செக்ஸ் போரடித்து விட்டது என ஒரு சலிப்பு தோன்றும். அப்படி சலிப்பு இல்லாமல் செக்ஸில் ‘கிக்’ வர சில விஷயங்களை செய்ய வேண்டும். உங்களுக்கு பிடித்த செக்ஸ் கற்பனைகளை சொல்லி காட்டுவது, நடித்து பார்ப்பது என முயற்சி செய்யலாம். சில முத்தங்களுடன் சில விளையாட்டுக்களையும் விளையாடி பாருங்கள். படுக்கையறையில் எப்போதும் உடலுறவை மட்டும் கொண்டாடாமல் துணையையும் கொண்டாடினால், காதலும் காமமும் சலிக்காது. 

இதையும் படிங்க: தாம்பத்தியம் முடிஞ்சாலும்.. பெண்கள் இதை செய்ய மறந்தால்.. ஆண்களுக்கும் ஆபத்து!!

இதையும் படிங்க: தாம்பத்தியத்தில் ஸ்பீடா? ம்ஹூம்... மெல்ல தீண்டும் விரல் வித்தையை தெரிந்து கொள்ளுங்கள்.. நிபுணர் அட்வைஸ்

Latest Videos

click me!