வெங்காயத்தை நாம் உணவு தயாரிப்பில் பயன்படுத்துகிறோம். இதன் தோலுரிக்கும் போது கண்ணீர் வந்தாலும், அதன் சுவை பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஆனால் மக்கள் சமையலுக்காக வெங்காயத்தை உரித்த பிறகு, அதன் தோலைப் பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசிவிடுகிறார்கள். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொண்டால், வெங்காயத் தோல்களை சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. இதனால் உங்களுடைய கண்பார்வை அதிகரிக்கும். மாலைக்கண் நோயை தடுக்கும். குருட்டுத்தன்மை போன்ற நோய்களைத் தடுக்கிறது. இந்த பலனை பெற வெங்காயத் தோல்களை போட்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். இது நம் சருமத்தை மேம்படுத்துகிறது.
வெங்காயத் தோலில் வைட்டமின் சி உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது வைரஸ் தொற்று அபாயத்தை குறைக்கிறது. இதனால் சளி-இருமல் போன்ற பிரச்சனைகள் வராது.