பெண்களின் உச்சக்கட்டம் பத்தி ஆண்கள் நினைக்குறது முழுக்க தப்பாம்... எப்படி செயல்பட்டால் சக்சஸ் ஆகும்?

First Published | Jan 24, 2023, 12:32 PM IST

ஆண்கள் எப்படி செயல்படும்போது பெண்கள் உச்சக்கட்டம் அடைவார்கள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Image: Getty Images

உடலுறவு கணவன், மனைவி இணைந்து அனுபவிக்கும் அற்புதமான உணர்வு. இதனை முறையாக செய்யும்போது நீங்கள் உடலுறவில் இருமடங்கு இன்பத்தை சுகிக்க முடியும். இதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் பாலியல் வாழ்க்கை திருப்தி இல்லாமல் போய்விடும். உடலுறவில் பல விஷயங்களை ஆண்கள் தெரிந்து கொள்ளவில்லை அல்லது அவர்கள் அதை வேறுமாதிரி கற்பனை பண்ணி கொள்கிறார்கள். அப்படிதான் பெண்கள் உடலுறவில் அடையும் உச்சக்கட்டம் பற்றிய புரிதல் பெரும்பாலான ஆண்களுக்கு கிடையாது. பெண்ணின் உச்சக்கட்டத்தை சுற்றி ஆண் நினைத்து கொண்டிருக்கும் பொய்யான கற்பனையில் ஒன்றான, உடலுறவு தான் பெண்களுக்கு உச்சக்கட்ட இன்பத்தைத் தரும் என்பது தவறான கற்பிதம். 

Image: Getty Images

உடலுறவால் பெண்கள் உச்சக்கட்டத்தை அடைவது உண்மையாக இருந்தாலும், எல்லா பெண்களும் அப்படி அடைவதில்லை. மொத்த பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தான் உடலுறவின் மூலம் உச்சம் அடைகிறார்கள். இங்கு பெண்களின் உச்சக்கட்டம் குறித்து தெரிந்து கொண்டு உங்கள் துணையை மகிழ்ச்சியாக்குங்கள். 

கட்டுக்கதை 

உடலுறவு வைத்து கொள்ளும்போது யோனி ஊடுருவல் உச்சக்கட்டத்தை கொடுக்கும் என்று கூறுவது முழுக்க உண்மையல்ல. யோனி ஊடுருவல் பல பெண்களுக்கு உச்சக்கட்டத்தை கொடுப்பதில்லை. உடலுறவுக்கு மத்தியிலும் சில பெண்களுக்கு கூடுதல் தூண்டுதல் தேவைப்படும். மெயின் கோர்ஸை விடவும் அதற்கு முன்பு போர்பிளேவில் அதிக நேரம் ஈடுபட வேண்டும் என பல பெண்கள் நினைக்கிறார்களா. இதுதான் அவர்களை உச்சக்கட்டத்திற்கு கூட்டி செல்லும் வழி. பெண்களின் கிளிட்டோரிஸில் தொடும்போது கூடுதல் தூண்டுதல் உருவாக்கப்படுகிறது. மார்பகம், மார்பகக்காம்பு தொடுதல் அதில் தூண்டுதலின் மூலமும் உச்சக்கட்டத்தை அடையும் பெண்களும் இருக்கிறார்கள். 


Image: Getty Images

சுயஇன்பம் செய்வது பெண்களுக்கு நல்லதல்ல எனக் கூறுவது தவறான போக்கு. மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு, உடலுறவின் மூலம் கிடைக்கும் இன்பம் திருப்தி ஆகாத சமயம், சுயஇன்பம் மட்டுமே உச்சக்கட்டத்தை அடைவதற்கான வழியாக இருக்கிறது. பெண்களோ, ஆண்களோ அளவாக சுய இன்பம் செய்வதில் தவறில்லை. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களோடு சம்பந்தப்பட்டது. 

Image: Getty Images

உடலுறவு கொள்ளும்போது காலம் மற்றும் நேரம் கணக்கில்லை. இருவர் மனமொத்து இணைந்திருக்கும்போது நாள்கணக்கில் அந்த இன்பத்தை அனுபவிப்பர். உடலுறவு என்பது பாலினம், பெண்ணின் தூண்டுதல் நேரம், முறை, சுழற்சி மற்றும் இயல்பு ஆகியவற்றைப் பொறுத்தது. சில பெண்கள் உடலுறவுக்கு முன் உடலை அறிந்து கொள்ளும் ஆணின் தொடுகைகளை அனுபவித்து உச்சக்கட்டத்தை அனுபவிக்கிறார்கள். நீண்ட நேரம் உடலுறவு கொள்வது, அதிக இன்பத்தை தரும். உச்சக்கட்டம் இல்லை என்பது உறவில் தோல்வி என்பது கிடையாது. 

உடலுறவு பல செயல்களின் கோர்வையான நிகழ்வு. உரையாடல், முன்விளையாட்டு, கற்பனை, குறிப்பாக உங்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கம் ஆகியவை அடங்கும். உச்சம் அடைவதை இலக்காக கொண்டு இயங்க வேண்டாம். நீங்கள் அந்த செயலை அனுபவிக்க வேண்டும். அப்படி அனுபவிக்கும்போது, தானாகவே உச்சக்கட்டத்தை அடைய முடியும்.  

இதையும் படிங்க: உடலுறவில் இந்த பொசிஷன்களில் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்ப்பு அதிகரிக்கும்.. ஏன் தெரியுமா?

சுயஇன்பம் உச்சக்கட்டம் அடைவதை குழப்புவதில்லை. ஆனால் உங்கள் துணை சுய இன்பம் செய்பவராக இருந்தால் உடலுறவில் அதை விட அதிக இன்பத்தை எதிர்பாக்கலாம். சுய இன்பம் செய்வது உங்களைப் பற்றி மேலும் அறிய உதவும். தம்பதியினர் உடலுறவில் உச்சம் தொட வேண்டுமெனில் புது முயற்சி, புதிய ரொமான்ஸ் முயற்சியை அவ்வப்போது முயற்சி செய்யலாம். உரையாடலும், அணுக்கமான நெருக்கமும் தான் உறவை மேலும் பலப்படுத்தும். 

இதையும் படிங்க: உடல் எடையை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் அற்புத டீ... வெறும் வயிற்றில் இப்படி குடித்து பாருங்கள்!!

Latest Videos

click me!