படிக்கட்டுகளில் ஏறுதல் மாறிவரும் நமது வாழ்க்கை முறையும், முற்றிலும் மாறிய உணவுப் பழக்கமும் நம்மை பல நோய்களுக்கு ஆளாக்குகிறது. இந்த காலத்தில் ஆரோக்கியமாக இருப்பது சவாலானது. ஆரோக்கியமாக இருக்க பலர் தினமும் ஜிம்மிற்கு செல்கின்றனர். ஆனால் பிஸியான வாழ்க்கை முறையால் சிலருக்கு ஜிம்மிற்கு செல்ல நேரமில்லை. ஆனால் ஒரு காசு கூட செலவழிக்காமல் ஆரோக்கியமாக இருக்க ஒரு வழி இருக்கிறது. அது என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
நீங்கள் எல்லா வகையிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் ஒரு சிறிய மாற்றத்தை நீங்கள் செய்ய வேண்டும். அது என்ன? எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட்களுக்கு பதிலாக படிக்கட்டுகளில் செல்லுங்கள். ஆம்..ஏனெனில் படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது. ஆனால் படிக்கட்டுகளில் ஏறும் போது கீழே விழுந்து முதுகு மற்றும் கால்களில் வலி ஏற்படாமல் இருக்க வசதியான காலணிகளை அணியுங்கள். இப்போது படிக்கட்டுகளில் ஏறுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
நல்ல தூக்கம்: படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் உடலை நாள் முழுவதும் ரிலாக்ஸ்சாக வைத்திருக்கும். உங்கள் மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும். இதன் மூலம் இரவில் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக தூங்குவீர்கள். படிக்கட்டுகளில் ஏறும் பழக்கம் தூக்கமின்மை பிரச்சனையையும் குணப்படுத்தும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எடை இழப்புக்கு: ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் ஆரோக்கியமான எடையுடன் இருக்க வேண்டுமென்றால் படிக்கட்டுகளில் ஏறுங்கள். ஆம்..படிக்கட்டுகளில் ஏறுவதால் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. எடையையும் பராமரிக்கிறது. தினமும் அரை மணி நேரம் படிக்கட்டுகளில் ஏறினால் உடல் எடை குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.
மன ஆரோக்கியத்திற்கு நல்லது: உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் வெளியாகும். உங்களுக்குத் தெரியுமா படிக்கட்டுகளில் ஏறுவது எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இது நம்மை நன்றாக உணர வைக்கிறது. மேலும் படிக்கட்டுகளில் ஏறுவது நமது முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
இதையும் படிங்க: Vastu tips: படிக்கட்டுக்கு அடியில் கழிப்பறை இருந்தா பணம் பிரச்சனை வருமாம்...கவனமாக இருங்க!
மூட்டுகளை வலுவாக்கும்: படிக்கட்டுகளில் ஏறுவது தசைகளை பலப்படுத்துகிறது. படிக்கட்டுகளில் ஏறும்போது கால்கள், தொடைகள், இடுப்பு மற்றும் முழங்கால்களின் தசைகளைப் பலப்படுத்துகிறது. இது கீல்வாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. உடல் செயல்பாடு இல்லாமை மூட்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.