இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணா, 10 நொடிகளில் தூங்கிவிடலாம்.. ட்ரை பண்ணி பாருங்க..

First Published | Oct 2, 2023, 1:39 PM IST

வெறும் 10 நொடிகளில் உங்களால் தூங்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா

நாள் முழுக்க வேலை செய்து களைத்திருந்தாலும், படுத்த உடனே தூக்கம் வருமா என்றால் இல்லை என்பதே பதில்.. சிலருக்கு மட்டுமே படுத்த உடனே தூங்கும் பாக்கியம் கிடைக்கும். நிம்மதியின்மை, கவலை போன்ற காரணங்களால் பலரும் தூக்கமின்றி தவிப்பதை பார்க்க முடிகிறது.

போதாக்குறைக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாகவே பலரும் இரவில் அதிக நேரம் விழித்திருக்கின்றனர். எனவே வெகுநேரம் தூக்கம் வராமல் தவிப்பது அல்லது தூக்கத்தில் இருந்து திடீரென எழுந்து மீண்டும் தூங்க முடியாமல் தவிப்பது போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பல உடல்நல பிரச்சனைகள் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Tap to resize

ஆனால் வெறும் 10 நொடிகளில் உங்களால் தூங்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான். அதற்கு நீங்கள் மிலிட்டரி தூக்க முறையை கையாள வேண்டும். அதை எப்படி கையாள்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இரண்டாம் உலகப் போரின் போது, வீரர்கள் தங்களுக்கு கிடைத்த குறைவான நேரத்தில் நிறைவான தூக்கத்தை பெற வேண்டி இருந்தது. எனவே இது அமெரிக்க கடற்படையின் ப்ரீஃபிளைட் பள்ளி விமானப்படை வீரர்கள் 120 வினாடிகளில் தூங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்காக ராணுவ வீரர்கள் பயன்படுத்திய முறை தான் மிலிட்டரி தூக்க முறை.

எப்படி மேற்கொள்ள வேண்டும்?உங்கள் வாயில் உள்ள தசைகள் உட்பட உங்கள் முழு முகத்தையும் ரிலாக்ஸாக வைத்து கொள்ள வேண்டும். உங்கள் தோள்களை ரிலாக்ஸாக விட்டு, மேலும் மனதை ஒருமுகப்படுத்தி மூச்சை வெளியே விட வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் மார்பு மற்றும் கைகளும் ரிலாக்ஸாக இருக்க வேண்டும்.

அதே போல் உங்கள் கால்கள், தொடைகளை ரிலாக்ஸாக வைத்து, அடுத்த 10 விநாடிகளுக்கு அனைத்து சிந்தனைகளையும் விலக்கி, ஒரு நிதானமான காட்சியை கற்பனை செய்து 10 வினாடிகள் உங்கள் மனதை தெளிவுபடுத்துங்கள். அதற்குள் உங்களுக்கு தூக்கம் வந்து விடும்.

இது வேலை செய்யவில்லை என்றால், 10 வினாடிகளுக்கு மீண்டும் மீண்டும் சொல்ல முயற்சிக்கவும். ஒருக்கட்டத்தில் நீங்கள் தூங்கிவிடுவீர்கள்.

Latest Videos

click me!