இரவில் நடைப்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? பொதுவாக, நடைப்பயிற்சி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது காலையில் செய்யும் பயிற்சி தான். சிலர் மாலையிலும் செய்வர். ஆனால் இரவில் யாரும் செய்வதை நாம் பார்த்திருக்கமாட்டோம். குறிப்பாக பலர் இரவு சாப்பாடை முடித்த பின் நேரடியாக தூங்க சென்றிடுவிடுவார்கள். ஆனால் இரவு சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்தால் உடலுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. எனவே, இரவில் உணவு சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
செரிமான ஜீரணத்திற்கு உதவும்
நீங்கள் நடைபயிற்சி செல்லும்போது வயிற்றில் கேஸ்ட்ரிக் என்ஜைம்களின் சுரப்பு அதிகமாவதால், உடலில் செரிமான சக்தி மேம்படும். இதனால் வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். அதுபோல் இரவில் நடப்பதால் கலோரிகள் ஏராளமாக எரிக்கப்படும். ஒருவேளை நீங்கள்
சாப்பிட்ட பிறகு உடனே ஓய்வெடுக்கச் சென்றாலோ அல்லது அமர்ந்து விட்டாலோ உடலில் கலோரிகள் தேக்கம் அடைந்து உடல் பருமன் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
நீங்கள் இரவு சாப்பிட்ட பிறகுப் நடைபயிற்சி செய்யும்போது உணவுகள் எளிதாக ஜீரணம் அடைச் செய்யும். மேலும் அது வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால், உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடு மேம்படுவதோடு மட்டுமல்லாமல் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்
இரவு நேரத்தில் நடைபயிற்சி செய்யும்போது உடலில் உள்ள குளுகோஸ் பயன்படுத்தபடுவதால், இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் நீங்கள் இரவில்
நடைபயிற்சி மேற்கொள்ளும் போது எண்டோர்பின்ஸ் என்ற என்ஜைம் வெளிப்படுகிறது. இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
இரவில் நொறுக்கு தீனி சாப்பிடக் கூடாது
இரவில் தூக்கம் வராமல் சிலர் நொறுக்கு தீனி சாப்பிடுவதை விரும்புவர். ஆனால் இது உங்கள் உடல் நலனுக்கு தீமையை விளைவிக்கும். நீங்கள் சாப்பிட்ட பிறகு 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் நொறுக்கு தீனி சாப்பிடும் எண்ணம்
வராது.