பொதுவாக பேக்கிங் சோடாவை கேக், ரொட்டிகள்,பிஸ்கட்கள், வடை மற்றும் இட்லி போன்றவை சாஃப்ட்டாக வருவதற்கு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்ப்பார்கள். பேக்கிங் சோடா உபயோகப்படுத்தினால் நன்றாக புஸ்ஸுன்னு உப்பி வருவதற்கு இதனை ஹோட்டல் மற்றும் வீட்டு சமையலில் சிலர் பயன்படுத்துகிறார்கள்.
இப்படி அடிக்கடி சேர்க்கப்படும் சிட்டிகை அளவிலான பேக்கிங் சோடாவால் எத்தனை பிரச்சனைகள் வரும் என்று தெரியுமா? இதனை தொடர்ந்து உபயோகித்தால் பல்வேறு தீங்குகளை உருவாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இயற்கையாகவே சோடா பைகார்ப் காரத் தன்மை கொண்டது. தவிர இரத்தத்தின் காரத் தன்மையை மாற்றுகிறது. அதே நேரத்தில் இதன் pH-ல் ஏதேனும் மாற்றம் ஏற்படின் உடல் பல்வேறு கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.