தினந்தோறும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடிப்பதால், செரிமான மண்டலம் மிகச் சிறப்பாக செயல்படும். கேரட்டில் கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் ஆகிய இரண்டுமே இருப்பதால் இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
கேரட்டில் உள்ள நார்ச்சத்துக்கள், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால், பசியைக் கட்டுப்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் குறைக்கிறது.
கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றது. இவை பல நோய்களுக்கு எதிராக மிகச் சிறந்த அளவில் போராடுகிறது. குறிப்பாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.