தேன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு மூலமாகும். பிரக்டோஸ், கார்போஹைட்ரேட், ரைபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் தேனின் முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.
தோல் அழற்சி:
தோல் அழற்சி இருந்தால் ஆலிவ் எண்ணெய் கலவையை தேன் கலந்து வலி இருக்கும் சருமத்தில் தடவினால் பிரச்சனையை தீர்க்கலாம். தீக்காயங்கள் இருந்தால் அவற்றின் மீது தேனை தடவுவது, அவற்றில் காணப்படும் இறந்த, தேவையற்ற செல்களை நீக்கி, தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்
2. சைனஸ் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம்
இன்று அதிகரித்து வரும் மாசு மற்றும் தூசி காரணமாக பலருக்கு சைனஸ் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏற்படும். இயற்கையாகவே தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள், தொற்றுகளை அழிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. ஆம், தேனில் ஆன்டி பாக்டீரியா செயல்திறன் கொண்ட மெத்தில் கிளையோக்சல் அதிகளவு காணப்படுகிறது. இந்த மெத்தில் கிளையோக்சல் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
3. எலும்புகளை பலப்படுத்தும்:
தேன் மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன; தேனை தேவையான அளவு எடுத்துக் கொள்பவர்களின் உடலில் கால்சியத்தை உறிஞ்சும் திறன் அதிகரித்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
4. ஈறு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது
தேனின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் தொற்று-குணப்படுத்தும் பண்புகள் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் விரைவாக குணப்படுத்துவதற்கும் உதவுகின்றன. ஈறு அழற்சி போன்ற ஈறு கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க தேனைப் பயன்படுத்தலாம்.