பெண்கள் கண்டுப்பா சாப்பிட வேண்டிய '5' விதைகள்; விஷயம் தெரிஞ்சா விடமாட்டீங்க..!

Published : Feb 15, 2025, 11:16 AM IST

Seeds for Women's Health : பெண்கள் தங்களது உணவில் கண்டிப்பாக சில விதைகளை சேர்க்க வேண்டும். அவை அவர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். 

PREV
17
பெண்கள் கண்டுப்பா சாப்பிட வேண்டிய '5' விதைகள்; விஷயம் தெரிஞ்சா விடமாட்டீங்க..!
பெண்கள் கண்டுப்பா சாப்பிட வேண்டிய '5' விதைகள்; விஷயம் தெரிஞ்சா விடமாட்டீங்க..!

பெண்கள் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமானது. அவற்றில் சில விதைகளும் அடங்கும். விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அவை பெண்களின் பல உடல்நல பிரச்சனைகளை தடுக்க உதவுகின்றன.  எனவே, பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் 5 விதைகள் மற்றும் அவற்றின் நன்மைகள், சாப்பிடும் முறை பற்றி இங்கு காணலாம்.

27
சியா விதைகள்:

சியா விதைகள் சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகின்றது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஏராளமாக உள்ளன. இது 
எலும்புகளை வலிமையாக்கும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கும், எடை இழப்புக்கு உதவுகிறது, இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும், சருமம் மற்றும் தலைமுடியை ஆரோக்கியமாக வைக்கும். எனவே, சியா விதைகளை நீங்கள் தண்ணீர் அல்லது தயிரில் கலந்து சாப்பிடலாம். இது தவிர ஓட்ஸ், ஸ்மூத்திகள் அல்லது சாலட்டுகளிலும் சேர்த்து சாப்பிடலாம்.

37
ஆளி விதைகள்:

ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் லிக்கான்கள் காணப்படுகின்றன. லிக்கான்கள் என்பது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகின்றது. இந்த விதையானது ஹார்மோன் ஏற்றுத்தாழ்வுகளை குறைக்க உதவுகிறது, இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும், சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ஆளி விதைகளை தயிர், சாலட் அல்லது ஸ்மூதிகளில் சேர்ந்து சாப்பிடலாம்.

47
பூசணி விதைகள் :

பூசணி விதைகளில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் ஏராளமாகவே உள்ளன. இது நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது, மனநிலை மாற்றங்களை குறைக்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். பூசணி விதைகளை நீங்கள் வறுத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். இது தவிர சாலட் தயிர் அல்லது சூப்பிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

57
சூரியகாந்தி விதைகள்:

சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் செலினியம் நிறைந்து காணப்படுகின்றன. இந்த விதையானது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும், சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும், மனநிலை மாற்றங்களை குறைக்கவும் மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகின்றது. சூரியகாந்தி விதைகளை நீங்கள் வறுத்தோ அல்லது அப்படியே சாப்பிடலாம். மேலும் இதை சாலட் தயிர் அல்லது சூப்பில் சேர்த்து சாப்பிடலாம்.

இதையும் படிங்க:  பெண்களோட தொப்புளில் ஆமணக்கு எண்ணெய்... இப்படி செய்தால் '5' நன்மைகள் உறுதி!!

67
எள் விதைகள்:

எள்ளில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் ஏராளமாக உள்ளன. அவை எலும்புகளை வலிமையாக்கும், இரத்த சோகையை தடுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்ததும், முடியை ஆரோக்கியமாக வைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இல்லை நீங்கள் வறுத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். இவற்றைத் தவிர தயிர் அல்லது சாலட்டிலும் சேர்க்கலாம் மேலும் நீங்கள் ஏதாவது இனிப்பு பண்டங்கள் செய்து கூட சாப்பிடலாம்.

இதையும் படிங்க:  ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவை - ஆய்வில் வெளிவந்த தகவல்!

77
இந்த விஷயங்களை நினைவில் கொள்:

- விதைகளை நீங்கள் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். ஆனால் எதையும் அதிகமாக சாப்பிட வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- அதுபோல உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

- விதைகளை சாப்பிடும் முன் அவற்றை சுத்தமான தண்ணீரில் கழுவ மறக்காதீர்கள்.

- முக்கியமாக சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து பிறகுதான் சாப்பிட வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories