
Summer Drinks To Reduce Body Heat : கோடை காலம் தொடங்கிவிட்டது. இந்த சீசன் நம்மை அதிகமாகவே தொந்தரவு செய்யும். குறிப்பாக கொளுத்தும் வெயிலால் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறும். இதனால் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில் உடலை நீரேற்றுமாக வைத்திருப்பது ரொம்பவே முக்கியம். இல்லையெனில், நீச்சத்து குறைபாடு தவிர, உடல் சோர்வு, வெப்ப பக்கவாதம் போன்ற பிரச்சனையையும் ஏற்படுத்தும். மேலும் உடல் சூட்டால் செரிமான பிரச்சினைகள், சரும வளர்ச்சி மற்றும் வெடிப்பு, முகப்பருக்கள், ரத்த அழுத்தம், தலைவலி, தலைசுற்றல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவையும் ஏற்படும். எனவே, அதிகரிக்கும் வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க கோடை காலத்திற்கு ஏற்ற பானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கோடை வெயில் காரணமாக ஏற்படும் தலைச்சுற்றல் பிரச்சனையை சமாளிக்க எலுமிச்சை ஜூஸ் போடும் போது அதில் சிறிதளவு உப்பு கலந்து குடித்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். ஏனெனில் எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், அவை நம்முடைய உடலை கோடை வெயிலிலும் குளிர்ச்சியாக வைக்க உதவும். வேண்டுமானால் எலுமிச்சை ஜூஸுடன் சிறிதளவு புதினா மற்றும் இஞ்சி சேர்த்து குடித்தால் சுவையாகவும் இருப்பது மட்டுமல்லாமல், உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைக்கும்.
கோடை வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் பானங்களில் ஒன்றுதான் பப்பாளி ஜூஸ். இதில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் பைப்பேன் உள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றலை தரும் மற்றும் உடலை குளிர்ச்சியாக வைக்கும்.
கோடை வெயிலில் இருந்து உங்களது உடலை பாதுகாக்க குடிக்க வேண்டிய மற்றொரு பானம் துளசி ஜூஸ் தான். இந்த பானம் குளிர்காலத்திற்கு மட்டுமல்ல வெயில் காலத்திலும் ஏற்படும் சளி பிரச்சனையை குணமாக்கும். இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.
இதையும் படிங்க: பெண்களை காக்கும் நுங்கு.. யாருக்கும் தெரியாத '5' ஆரோக்கிய நன்மைகள்!!
கோடை காலம் வந்தாலே எல்லாருடைய நினைவுக்கு முதலில் வருவது கரும்பு சாறு தான். இந்த சீசனில் ஆங்காங்கே கரும்பு சாறுகள் விற்பனையாவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த பானம் நம்முடைய உடலை இந்த வெயிலுக்கு இதமாக வைத்திருக்கும். கரும்பு சாறில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நம்மை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமின்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களையும் வழங்கும்.
இதையும் படிங்க: அடிக்கும் வெயிலிலும் துரத்தும் சளி பிரச்சினை; விரட்டியடிக்கும் '5' வீட்டு வைத்தியங்கள்!
அந்தந்த சீசன்களில் விளையக்கூடிய பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. எனவே கோடை காலத்தில் விளையக்கூடிய எல்லாவிதமான பழங்களை வைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம். குறிப்பாக இந்த சீசனில் தர்பூசணி, மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்கள் அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. அவை உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். ஏனெனில், அவற்றில் நீச்சத்து அதிகமாக உள்ளதால் உடலை எப்போதுமே நீரேற்றத்துடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் உடல் சூட்டையும் தணிக்க உதவும்.