Holi 2025 : ஹோலி கலர் பொடி சருமம், தலைமுடியை பாதிக்காமல் இருக்க டிப்ஸ்!!

Published : Mar 13, 2025, 05:33 PM IST

ஹோலி பண்டிகைக்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றினால் உங்களது சருமம் மற்றும் தலைமுடியை ஹோலி கலர் பொடியில் இருந்து பாதுகாக்கலாம்.

PREV
16
Holi 2025 : ஹோலி கலர் பொடி சருமம், தலைமுடியை பாதிக்காமல் இருக்க டிப்ஸ்!!

Pre Holi 2025 Skincare Tips : இந்த 2025 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகையானது நாளை (மார்ச்.14) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. கலர் கலர் வண்ணம் தூவி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவை செயற்கை வண்ண பொடிகள் என்பதால் இதனால் சருமம், தலைமுடி, முகம் மற்றும் கண்கள் என அனைத்தும் பாதிக்கப்படும். இதன் காரணமாக சரும வறட்சி, அலர்ஜி மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் ஹோலி பண்டிகையின் உற்சாகத்தில் உங்களது சருமம் மற்றும் தலைமுடி செய்து சேதமடைவதை தடுக்க ஹோலிக்கு முன் சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும் ஹோலி கலர் பொடியில் இருந்து உங்களது சரும மற்றும் தலைமுடியை பாதுகாக்கலாம். அவை என்னவென்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

26
முகத்திற்கு ஐஸ் கட்டி ஒத்தடம்:

ஹோலி பண்டிகை நாளில் வெளியே செல்வதற்கு முன்பாக முகத்திற்கு ஐஸ் கட்டி தேய்க்கவும். இது உங்களது சருமத்தில் துளைகளை மூடும். சுமார் பத்து நிமிடம் ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் வண்ணங்கள் பட்டாலும், சேதமடையாது.

36
எண்ணெய்:

ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாட என்னை சிறந்த தேர்வாகும். ஆம், சருமத்தில் ஹோலி வண்ணங்கள் படும் இடத்தில் நீங்கள் எண்ணெய் தடவ வேண்டும். இதனால் சருமம் கலர் வெண்ண பொடியால் பாதிக்காமல் தடுக்கப்படும். வேண்டுமானால் ஹோலி பண்டிகைக்கு முன்பாக உடல் முழுவதும் எண்ணெய் தடவி மசாஜ் செய்யுங்கள். இது சருமத்தை ஈரப்பதமாக வைக்கும் மற்றும் வண்ணங்களை சருமத்திற்குள் ஊடுருவச் செய்யாது. மேலும் அவற்றை எளிதாக அகற்றிவிடலாம். இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெய் பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தலாம். 

இதையும் படிங்க:  ரூ.1,199-க்கே விமானப் பயணம்! இண்டிகோ வழங்கும் சூப்பர் ஹோலி ஆஃபர்!

46
சன் ஸ்கிரீன்:

அதுபோல ஹோலி பண்டிகை கொண்டாடும் முன் சருமத்திற்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். இது சருமத்திற்கும் நிறத்திற்கும் இடையில் தடையை ஏற்படுத்தும். மேலும் சருமம் சேதமடைவதை தடுக்கும் மற்றும் ஈரப்பதமாக வைக்கும்.

இதையும் படிங்க:  Holi 2025 : இதுக்காக தான் ஹோலி பண்டிகை கொண்டாடுறாங்களா? சுவாரசிய பின்னணி!! 

56
தலை முடியை பாதுகாப்பது எப்படி?

ஹோலி கலர் வண்ணங்களால் உங்களது தலை முடி பாதிப்படையாமல் இருக்க தேங்காய் எண்ணெய் அல்லது ஆர்கான் எண்ணெயை பயன்படுத்தலாம். முக்கியமாக ஹோலிக்கு முன் தலைக்கு ஷாம்பு போட வேண்டாம். இயற்கை எண்ணெய் முடியில் இருக்க வேண்டும். அதுபோல முடி வறண்டு இருந்தால் அது வண்ணம் மற்றும் தண்ணீரை உறிஞ்சிவிடும். எனவே தலைக்கு எண்ணெய் மற்றும் கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்துவதை புறக்கணிக்க வேண்டும். எனவே இரவில் தலைக்கு எண்ணெய் வைத்து தலை முடியை பாதுகாக்கவும்.

66
நகங்கள்

நகங்களில் இருக்கும் ஹோலி வண்ணங்களை அகற்றுவது ரொம்பவே கடினம். பல வாரங்கள் ஆனாலும் அவை நகங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும். இதற்கு நீங்கள் வார்னிஷ் அல்லது நெயில் பாலிஷ் அடிப்பது சிறந்த தீர்வாக இருக்கும். இது உங்களது நகங்கள் மற்றும் வண்ணங்களுக்கு இடையே ஒரு தடுப்பு போல் இருக்கும். இதனால் நகங்கள் பாதுகாக்கப்படும் மற்றும் சுத்தமாகவும் இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories