பிபி-யை கட்டுப்படுத்த உதவும் 4 வகையான வைட்டமின்கள்- முழு விபரம்..!!

First Published Jan 25, 2023, 2:43 PM IST

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சில குறிப்பிட்ட வைட்டமின்கள் உள்ளன. இவற்றை உணவுடன் அல்லது உணவு இல்லாமலும் உட்கொள்வது நன்மையை தருகிறது.
 

high bp

இன்றைய காலத்தில் இளைஞர்களைக் கூட தொந்தரவு செய்யும் பிரச்னையாக ரத்த அழுத்தம் உருவெடுத்துள்ளது. உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்தால், அதை சாதாரணமாக நிராகரிக்கப்படக் கூடாது. இதன்மூலம் இருதய பிரன்சை, வாதம், சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அந்த வகையில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் வைட்டமின்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

காரணங்கள்

உடல் பருமன் ரத்த கொதிப்பு அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது. அதேபோன்று நீரிழிவுப் பிரச்னை பரம்பரை நோயாக உள்ளவர்களும் சுதாரிப்புடன் இருப்பது முக்கியது. அதிகப்படியான மன அழுத்தம் உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கு வழிவகுக்கிறது. தூக்கமின்மை மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை உயர் இரத்த அழுத்தத்திற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. அதிகளவு சோடியம் உட்கொள்வதும் மற்றொரு முக்கிய காரணமாகும். உணவில் சேர்க்கப்படும் உப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் ரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

vitamin d

வைட்டமின் டி

ரத்த அழுத்தத்தை குறைக்க பல வழிகள் உள்ளன. குறிப்பிட்ட வைட்டமின்களை எடுத்துக்கொள்வதன் மூலமாகும் இந்த பிரச்னையை கட்டுப்படுத்தலாம். மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள், வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி முறைகளுடன் இந்த வைட்டமின்களில் சிலவற்றைச் சேர்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகிறது. இது எலும்புகளின் ஆரோக்கியம் போன்றவற்றுக்கு மட்டுமல்ல, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகின்றன. இரத்தத்தில் உள்ள கார்டிசோலின் அளவுகள் தொடர்ந்து இதயத்திற்கு இரத்தத்தை செலுத்தும் இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. வைட்டமின் டி கார்டிசோலின் அளவைக் குறைக்க உதவுகிறது.
 

வைட்டமின் பி3

இதுவொரு சிக்கலான வைட்டமினாகும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதை சாப்பிடவேக் கூடாது. ரத்த அழுத்தம் காரணமாக ரத்த நாளங்கள் சுருங்குவதை இது தடுக்க உதவுகிறது. 
மேலும் இது ரத்த நாளங்களின் உட்புறத்தை சுத்தம்  செய்யவும் உதவுகிறது. நாம் தினசரி சாப்பிடும் அரிசி உணவுகள், நட்ஸ், விதைகள், வாழைப்பழங்கள் மற்றும் இறைச்சிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின் பி3 போதுமான வரையில் கிடைக்கிறது.

pottasium rich food

பொட்டாசியம்

பொட்டாசியம் உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றுகிறது. இது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும் உதவுகிறது. இதனால் ரத்த நாளங்களில் இருக்கும் பிரச்னை படிப்படியாக குறைகிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கும் மேலும் இருதயத்துக்கு வேண்டிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும். இது அத்திப்பழம், கீரை, ப்ரோக்கோலி, வெண்ணெய், காலே மற்றும் நட்ஸில் அதிகளவு காணப்படுகிறது.

வைட்டமின் இ

இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்து வைட்டமின் இ பயன்படுகிறது. இவை கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள். இது பல உணவுகளில் இருந்து கிடைக்கிறது. மீன்கள் மத்தி மற்றும் சுறாவில் அதிகளவு காணப்படுகிறது. அதேபோன்று நட்ஸ், விதைகள், ஆலிவ் எண்ணெய், பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் உள்ளிட்டவற்றில் வைட்டமின் இ போதுமான வரையில் காணப்படுகிறது.

click me!