பரிதாபத்தால் உடலுறவுக் கொள்ளும் பார்டனருடன் வாழ்கிறீர்களா..??

First Published Jan 25, 2023, 12:38 PM IST

உடல் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பாத ஒருவர், கடனே என்று உடலுறவில் ஈடுபடுவது தான் பரிதாபமான பாலுறவு. 
 

உங்கள் மீதான பரிதாபம் காரணமாக, உங்களுடைய பார்டனர் தங்களுடன் உடலுறவில் ஈடுபடுவதும் என்றாவது உணர்ந்தது உண்டா? அதுபோன்ற உணர்வை அனுபவிக்கும் நபராக இருந்தால், உடல் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பாத ஒருவர், கடனே என்று உடலுறவில் ஈடுபடுவது தான் பரிதாப பாலுறவு. அதாவது உங்கள் மீதான பரிதாபத்தால் ஏற்படும் உடலுறவு என்பது, இதற்கான பொருள். இது உறவு, உடல் மற்றும் மனநிலை ஆகியவற்றை பொறுத்தும் ஏற்படக்கூடும். இதுபோன்ற பிரச்னையால் உங்கள் பார்டனர் அவதிப்படுவதாக இருந்தால், அதை தெரிந்துகொள்வது எப்படி? என்கிற கேள்வி உங்களுக்குள் இப்போது எழுந்திருக்கும். அதை குறித்த விபரங்களை பதிவு செய்கிறது இந்த கட்டுரை.
 

முனைப்பு

உடலுறவில் ஈடுபடுவதில் நீங்கள் மட்டுமே முனைப்பு காட்டுவதும், அதற்கு உங்களுடைய பார்டனர் எந்தவிதமான முயற்சி செய்யாமல் இருந்தால், அது கவனிக்கப்பட வேண்டிய பிரச்னையாகும். ஒருவேளை நீங்கள் முனைப்புக் காட்டியவுடன், உடலுறவில் கடமைக்கு ஈடுபடுவது என்பது அடுத்தக்கட்ட அறிகுறியாகும். இதுதொடரும் பட்சத்தில், உங்களுக்கு கிடைப்பது உங்கள் மீதான பரிதாபத்தில் ஏற்படும் பாலுறவு என்பதை தெரிந்துகொள்க.

அவசரம்

ஒவ்வொரு முறையும் நீங்கள் உறவில் ஈடுபடுகையில், எல்லாவற்றையும் உடனடியாக முடித்துவிட்டு படுத்து தூங்கிவிட வேண்டும் என்கிற விதத்தில் பார்டனர் நடந்துகொள்வது மற்றொரு அறிகுறியாகும். இதற்கு உறவு மீதான அதிருப்தி அல்லது பாலியல் ஆர்வம் குறைவு போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதன்காரணமாக உடலுறவை அவர்கள் விரைந்து முடிக்க முனைப்புக் காட்டுக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு உடலுறவை கடந்து பல கடமைகள் இருப்பதாக கருதுவது முக்கிய காரணமாகும்.

இடைவெளி

உடலுறவின் போது உங்களுடைய துணை, தொடர்ந்து இடைவெளி எடுத்துக் கொண்டிருப்பது, அவருக்கு உறவில் ஆர்வமில்லை என்பதை காட்டுகிறது. கணவர் கேட்கிறார், மனைவி ஆர்வம் காட்டுகிறார் என்பதற்காக அவர்கள் உடலுறவில் ஈடுபடக் கூடும். மேலும், அவர்களுக்கு வேறு விதமான இன்பம் தேவைப்படுகிறது, அதன் காரணமாகவும் உங்களுடைய பார்டனர் உடலுறவில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்.

விருப்பமின்மை

உங்கள் மீது உங்களுடைய துணைக்கு காதல் உணர்வு இல்லையென்றாலும், அவர் பாலுறவு மீதான ஈடுபாட்டை குறைத்துக்கொள்ளக் கூடும்.தொடுதல், முத்தமிடுதல், கட்டிப்பிடித்தல் போன்றவை ஆரோக்கியமான உடல் உறவின் வடிவங்களாகும். அதை பிரச்னையாக கருதி உங்களுடைய துணை சண்டைக்கு வந்தால், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் முக்கியம்.

குற்ற உணர்வு

ஒவ்வொரு முறையும் உடலுறவில் ஈடுபட முனைப்புக் காட்டும் போது, அதை உங்களுடைய துணை எந்தவித ஆச்சரியமில்லாமல் காணப்பட்டால், அது பரிதாபமான பாலுறவு என்பதற்கான அறிகுறியாகும். இது குற்ற உணர்ச்சியை தரும். அதைப்போக்க உங்கள் துணையை நீங்கள் நன்கு அறிந்து கொண்டு, அவருடைய பாசம் மற்றும் விருப்பத்தை பெற்று உடலுறவில் ஈடுபட முயற்சிக்கலாம்.

click me!