உடல் எடையை குறைக்க பலவித டையட், உடற்பயிற்சி என எல்லா வகையான முயற்சிகளையும் நீண்ட நாள் முயற்சித்தும் எடை குறையவே இல்லையா? இதற்கு முக்கிய காரணம் உங்களது உடலில் மெட்டபாலிசம் ரொம்பவே கம்மியாக இருப்பது தான். அதை அதிகப்படுத்த வேண்டுமானால் இங்கு சொல்லப்பட்டுள்ள நான்கு மட்டும் விஷயங்களை தினமும் செய்தால் போதும். மெட்டபாலிசம் அதிகமாகும், எடையும் தானாக குறைய ஆரம்பிக்கும்.
25
ஒரே நேரத்தில் தூங்கி எழுவது :
எடை குறைப்பில் இது ரொம்பவே முக்கியமானது. நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நேரத்தில் தூங்கி எழுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நீங்கள் தூங்கும் நேரம் மற்றும் காலையில் எழுந்திருக்கும் நேரம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
35
இவற்றை வெறும் வயிற்றில் குடிக்காதே!
நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இப்படி குடிப்பது மெட்டபாலிசத்தில் தலையிடும். அதுபோல வெறும் வயிற்றில் இவற்றை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சூடான நீர் குடியுங்கள். அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து டீ காபி அல்லது பால் என உங்களுக்கு விரும்பியதை குடியுங்கள்.
டீ, காபி குடித்த பிறகு காலையில் குறைந்தது 15 நிமிடங்களாவது சூரிய ஒளியில் நிற்கவும். இதனால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும். வளர்ச்சிதை மாற்றத்திற்கு வைட்டமின் டி ரொம்பவே முக்கியம். இது தவிர, ஹார்மோன் சுரப்புகளை சீராக்க இது உதவி செய்யும். அதுபோல தினமும் காலை ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
55
காலை உணவு :
காலை தூங்கி எழுந்து சுமார் 3 மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை காலை உணவாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
மேலே சொல்லப்பட்டுள்ள இந்த நான்கு விஷயங்களை நீங்கள் தினமும் செய்து வந்தால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால் எடையும் குறையும்.