பண்டைய கால வழக்கங்களை பின்பற்றுவது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பண்டைய கால உணவு பழக்கம் அவ்வளவு நன்மைகள் செய்யக் கூடியது. ஏனென்றால் நம் முன்னோர் உணவே மருந்து என வாழ்ந்தவர்கள். நம் உடலில் இயற்கையாகவே நச்சுக்களை வெளியேற்றும் கழிவுநீக்க மண்டலம் உள்ளது. நச்சுக்களை நீக்கி, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், புரத உற்பத்திக்கும் கல்லீரல் உதவுகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியம். அதற்கு உதவக் கூடிய மூலிகை டீ வகைகளை இங்கு காணலாம்.
25
நச்சு நீக்கும் மஞ்சள் டீ! (Turmeric Tea)
எல்லோர் வீட்டிலும் இருக்கக் கூடிய மஞ்சள், ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடத்தகுந்தது. இதன் நிறத்திற்கு குர்குமின் தான் காரணன். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்க உதவும். மஞ்சள் டீ குடித்தால் பித்த நீர் உற்பத்தியை ஊக்குவிக்கும். உடலில் உள்ள நச்சு நீங்க உதவுகிறது.
35
அதிமதுரம் டீ (Athimathuram Tea)
இயற்கை இனிப்புச் சுவையுடன் காணப்படும் அதிமதுரம் சீன மருத்துவத்தில் புகழப்படும் அற்புத மூலிகை. இதில் உள்ள கிளைசிரைசினில் அழற்சி எதிர்ப்பு, கல்லீரல் பாதுகாப்பு பண்புகள் உள்ளன. இதை டீயாக தயாரித்து அருந்தினால் கல்லீரல் வீக்கம் குறையும்.உடலில் உள்ள நச்சு நீக்கும் செயல்முறைகளை மேம்படுத்த உதவும். அளவாக பயன்படுத்த வேண்டும். அதிகம் பயன்படுத்துவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
இதனை ஐந்து சுவைகள் கொண்ட பழம் என சீனாவில் அழைக்கிறார்கள். இவற்றை அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் வாங்கலாம். சீனாவில் பிரபலமான இந்த சசிந்திரா பெர்ரிஸ், உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். சிறுநீரகம், நுரையீரல், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மன அழுத்தத்தையும் குறைக்கும்.
55
நெருஞ்சில் டீ (Nerunjil Tea)
சிலிபம் மரியனம் (Silybum marianum) என்ற பால் நெருஞ்சில் மூலிகை கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியதரைக் கடலில் பயன்படுத்தப்பட்ட மருந்து. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதை டீயாக தயாரித்து அருந்துவது கல்லீரலை நச்சுகளிலிருந்து பாதுகாக்கும். ஏற்கனவே சேதமான கல்லீரல் செல்கள் கூட குணமாகும்.