10 Foods You Should Never Reheat : சமைத்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் சில உணவுகளை மீண்டும் சூடாக்கும் பொழுது அது விஷமாக மாறும் வாய்ப்பு உள்ளதாம். அந்த உணவு வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சமைத்த உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடும் பொழுது அது நேரத்தை மிச்சப்படுத்தினாலும், சில உணவுகளை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் பொழுது அவை விஷமாக மாறவோ அல்லது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தவோ அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய வீடுகளில் பெரும்பாலும் மீதமாகும் உணவுகளை பிரிட்ஜில் வைத்து மறுநாள் மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் எல்லா உணவுகளையும் அவ்வாறு சூடாக்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவு வகைகளின் பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
28
கோழி இறைச்சி
கோழி இறைச்சியில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால் சிக்கனை மீண்டும் சூடாக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். புரதத்தின் அடர்த்தி மீண்டும் சூடாக்கும் பொழுது மாறுகிறது. இது சரியாக செரிக்காமல் வயிறு மந்தம் அல்லது அஜீரணத்தை உருவாக்கக்கூடும். மேலும் கோழியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பொழுது அது பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒருமுறை கோழியை சமைத்து அதை அப்பொழுதே சாப்பிடுவது நல்லது. முதல் தடவை சமைக்கும் பொழுது 75 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சமைக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும்.
38
முட்டை
வேகவைத்த முட்டைகள் அல்லது வறுத்த முட்டைகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துதல் கூடாது. கோழியை போலவே முட்டையும் புரதச்சத்து நிறைந்த உணவாகும். சமைத்த முட்டையை மீண்டும் மீண்டும் சூடு படுத்துவது அதில் உள்ள புரத அமைப்பை சிதைத்து, நச்சுத்தன்மையை உருவாக்கலாம். இது கடுமையான வயிற்று வலி மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். முட்டையை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் பொழுது அது ரப்பர் போன்று மாறி சுவையை இழக்கும். இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்பதால் முட்டைகளை புதிதாக சமைத்து உட்கொள்வதே சிறந்தது.
காளான்களை சமைத்த உடனேயே சாப்பிடுவது தான் சிறந்தது. காளான்களில் சிக்கலான புரதங்கள் மற்றும் என்சைம்கள் உள்ளன. இவற்றை மீண்டும் மீண்டும் சூடாக்கும் பொழுது அவை உடைகின்றன. இது இதய பிரச்சினைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். காளான்களில் உள்ள புரதச்சத்துக்கள் மற்றும் நுட்பமான அமைப்பு மீண்டும் முறையற்ற வெப்ப நிலையில் சூடுபடுத்தும் பொழுது அதில் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம். இது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே காளான்களை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது.
58
கீரைகள்
கீரைகளில் இயற்கையாக நைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளன. கீரையை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் பொழுது அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுக்களாக மாறுகின்றன. இது உடலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தி புற்றுநோய் செல்களை தூண்டும் காரணியாக அமையலாம். மேலும் கீரையில் உள்ள புரதம் சிதையும் பொழுது அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கீரையின் சுவை மற்றும் சத்துக்களை பாதுகாக்க பிரஷான கீரை வாங்கி வந்து புதிதாக சமைத்து உண்பது சிறந்தது.
68
சாதம்
முதல் நாள் வடித்த சாதத்தை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும். சாதத்தை அறைவெப்ப நிலையில் நீண்ட நேரம் வைத்திருந்தால் அதில் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியாக்கள் உருவாகும். இதை மீண்டும் சூடு படுத்தினால் அந்த பாக்டீரியாக்கள் வெளியேற்றும் நச்சுக்கள் அழியாது. இது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை உருவாக்கும். எனவே சாதத்தை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டும் சூடு படுத்தும் பொழுது பேசிலஸ் செரியஸ் வளர்ச்சி அதிகரித்து முழு சாதத்தையும் நன்றாக மாற்றி விடும்.
78
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சமைத்த பிறகு அதை அறை வெப்ப நிலையில் நீண்ட நேரம் வைத்திருந்து பின்னர் சூடுபடுத்தக் கூடாது. இதில் போர்டலிசம் என்னும் அரிய வகை பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது. இதை சூடுபடுத்தும் பொழுது இதன் நச்சுத்தன்மை நீங்காமல் உடல் நலக் குறைவை ஏற்படுத்தும். உருளைக்கிழங்கை மீண்டும் சூடாக்கும் பொழுது, இந்த பாக்டீரியா அழிவதில்லை. மாறாக உணவில் நச்சுத்தன்மையும் நோய் பரவலுக்கும் வழிவகுக்கிறது.
88
சமையல் எண்ணெய்
ஏற்கனவே பொறிக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. எண்ணெயை மீண்டும் சூடாக்கும் போது அதன் அடர்த்தி மாறி டிரான்ஸ் ஃபேட் என்னும் நச்சுப் புகை உருவாகும். இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கான முக்கிய காரணமாகிறது. மேலும் ஆலிவ் எண்ணெய்கள் போன்ற குறைந்த புகை புள்ளிகளைக் கொண்ட சமையல் எண்ணெய்களை மீண்டும் சூடாக்கும் பொழுது அது தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்கும் இதன் காரணமாக ஆக்சிஜனேற்ற அழுத்தம் உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.