கோடைக்காலத்தில் பெஸ்ட் பழம் எதுன்னு கேட்டா, அது கிர்ணி பழம்தான். கிர்ணி பழம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும் ஒரு சூப்பர் ஸ்நாக். இது பழுக்க பழுக்க இனிப்பு சுவை கூடும். முலாம் பழத்தோட மருத்துவ குணங்களை இங்கே தெரிஞ்சுக்கலாம்.
கிர்ணி பழம் உங்கள் சருமத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. இதன் சதை மற்றும் விதைகளை பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவலாம். இந்த பேஸ்ட், வறட்சி மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகளைக் குறைத்து, சருமத்தை பொலிவாகவும் ஊட்டச்சத்துடனும் வைத்திருக்கும்.
25
அத்தியாவசிய வைட்டமின்கள்
கிர்ணி பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது கோடை வெப்பத்தில் உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது உடலைக் குளிர்ச்சியாக வைத்து, வெயிலில் இருந்து பாதுகாக்கிறது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் போதுமான அளவில் கிடைப்பதை இது உறுதி செய்கிறது.
35
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்
கிர்ணி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும் ஆக்சிஜனேற்ற செல் சேதத்தைத் தடுக்க உதவுகின்றன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கலாம். வீக்கம் குறைந்தால், நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்.
முலாம் பழத்தில் அதிக நீர் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், இது மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும். இதில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கங்களைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கலாம். உங்கள் உணவில் முலாம் பழத்தைச் சேர்த்து, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
55
உயர் ரத்த அழுத்தம் காணாமல் போகும்
முலாம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. இது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை உட்கொள்வது ரத்த நாளங்களைத் தளர்த்தி, உடல் முழுவதும் ரத்தம் சீராகப் பாய உதவும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உணவில் முலாம் பழத்தைச் சேர்த்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.