மனைவிக்கு துரோகம் பண்ற ஆண்கள்!! எந்த துறைல வேலை பார்ப்பாங்க? உண்மை தகவல்

Published : May 28, 2025, 03:37 PM IST

மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்கள் எந்த துறையில் வேலை செய்வார்கள் என்பதை உண்மை தகவல்களுடன் இந்தப் பதிவில் காணலாம்.

PREV
15

Which Professions Do Cheating Husbands Belong To : பெரும்பாலும் கணவன் மனைவி உறவுக்குள் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது. ஆனால் சிலர் உறவில் அப்படி இருக்காது. கணவர் மனைவியிடம் வேறொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார். பொய் பித்தலாட்டம் தான் அவரது இன்னொரு முகமாக இருக்கும். இந்தப் பதிவில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்கள் எந்த துறையில் வேலை செய்வார்கள் என்பதை உண்மை தகவல்களுடன் காணலாம்.

25

சமூக வலைதளங்களில் பல சுவாரசிய தகவல்கள் கிடைக்கும். அந்த வகையில் மேட்லைன் ஸ்மித் என்பவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்களை காணலாம். ஸ்மித் மனைவியை ஏமாற்றும் ஆண்களை கண்டுபிடிப்பதை தான் தன் தொழிலாக வைத்துள்ளார். இவரது தொழில் என்னவோ துப்பறிவாளர் போலதான். இவரது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பெண்கள். அதிலும் தன் கணவனை, காதலனை கண்காணிக்க சொல்லி இவரை பெண்கள் தொடர்பு கொள்கிறார்கள்.

35

கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் சோதனைகளை ஸ்மித் செய்திருக்கிறார். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களின் இன்னொரு முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த ஆண்களைக் குறித்து ஸ்மித் குறிப்பிடும் போது, அவர்கள் தங்களுடைய விருப்பத்திற்காக மட்டுமே வாழ்வதாகவும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

45

ஸ்மித்தின் சேவையை பெற பெண்கள் நம் இந்திய கட்டணத்திற்கு ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 6 ஆயிரம் வரை கொடுக்கிறார்கள். மேட்லைன் ஸ்மித், சம்பந்தபட்ட பெண்களின் கணவர்களை சோசியல் மீடியாவில் தொடர்பு கொள்வார். வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆண்கள் எனில் அவர்கள் வசமாக சிக்கும் தருணத்தில் அதை ஸ்கிரீன் ஷாட்களாக்கி தன்னுடைய வாடிக்கையாளருக்கு ஸ்மித் பகிர்ந்துவிடுவார். இப்படிதான் சீட்டிங் கணவர்களை கையும் களவுமாக பிடிக்கிறார் ஸ்மித்.

55

எந்த துறை ஆண்கள் ஏமாற்றுகிறார்கள்?

காவல் துறையில் வேலை செய்யும் ஆண்கள் பெரும்பாலும் மனைவியை ஏமாற்றுவதாக ஸ்மித் கூறுகிறார். அவர் இந்த வேலை செய்ய தொடங்கியதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளின் மனைவிகள் அவரிடம் தங்கள் கணவரை கண்காணிக்க கூறியுள்ளனர். அதில் பலர் ஸ்மித்தின் வலையில் சிக்கியுள்ளனர். இவர்கள் தவிர தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவர்கள், ராணுவ வீரர்கள் கூட இதில் விதிவிலக்கல்ல. உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் கூட கொஞ்சம் அப்படிதான் இருக்கின்றனர். இந்த பட்டியலில் வழக்கறிஞர்களும் உள்ளனர். மருத்துவர்கள் தான் கடைசியாக வரக் கூடியவர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories