இந்த ராசியினருக்கு 'காதலில் கண்டம்'.. என்ன பண்ணாலும் பிரேக் - அப் தான் ஆகும்... ஏன் தெரியுமா?

First Published | Jan 30, 2023, 11:55 AM IST

Love Horoscope: தலைகீழா நின்றாலும் சிலருக்கு காதல் வசப்படுவதில்லை; அதற்கு அவர்கள் காரணமில்லை. அவர்களுடைய ராசிதான் காரணமாம். காதலில் துரதிர்ஷ்டம் கொண்ட ராசிக்காரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம். 

காதல் துணையை வாழ்க்கையில் விரும்பாதவர் யார்? எல்லா அன்பும் கிடைத்தால் காதல் இல்லாவிட்டால் மனம் உடையும் நபர்கள் இங்கு ஏராளம். சிலர் நேசிப்பதற்காக மட்டுமே வாழ்கிறார்கள். காதலாலும், காதலிலும் அதிர்ஷ்டசாலிகளாக மாறக்கூடிய நபர்கள் இருக்கின்றனர். அதைப் போலவே காதலில் துரதிர்ஷ்டவசமானவர்களும் உள்ளனர். காதலில் துரதிர்ஷ்டவசமான 4 ராசிகளை தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள். 

கடகம் 

ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் போடால் என்னாகும்? உடைந்து தானே போகும். ஆனால் இந்த ராசியினர் அதைத்தான் செய்வர். அதாவது எல்லா வழிகளிலும் தங்களுடைய உணர்ச்சிகளை மட்டுமே வெளிப்படுத்தவே முயற்சி செய்வார்கள். மனதிற்குள்ளும் வெளியிலும் ஒரே மாதிரியாகவே இருப்பார்கள். இடம், பொருள், ஏவல் தெரியாது. இந்த அன்பான, உணர்ச்சிவசப்படக் கூடிய ஆன்மாவிற்கு கிட்டத்தட்ட காதல் சாத்தியமற்றது. அவர்கள் மனரீதியான விஷயங்களில் இருந்து மீள எப்போதும் சிறிது காலம் எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு காதல் உறவு முறிந்தால், அவர்கள் மீண்டு வர நீண்ட காலம் எடுக்கும். 


கன்னி 

இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் எனவும் சொல்லலாம். ஆனாலும் பாவம் அவர்களிடம் அந்த அதிர்ஷ்டத்தை விட துரதிர்ஷ்டம் இரண்டு மடங்கு உள்ளது. இவர்கள் ஒருவரை நேசிக்கும் போது, அழகாக நேசிப்பார்கள். அதனால்தான் ஒருவர் விட்டு சென்ற பிறகு மீண்டும் இன்னொருவரை நேசிப்பது இவர்களுக்கு கடினமாக இருக்கும். இவர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் உண்மையான காதலை கண்டுபிடிப்பதற்கு முன்பு அவர்கள் நிறைய தவளையும் (Toad) முத்தமிட வேண்டும் என்பதையும் அறிந்தேயிருக்கிறார்கள். இது வருந்தக் கூடிய விஷயம் தான். 

மகரம் 

இவர்கள் சனியால் ஆளப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் காதலில் துரதிர்ஷ்டவசமானவர்கள் என்று முழுமையாக சொல்ல முடியாது. ஆனால் தவறான நேரத்தால் துன்பப்படுகிறார்கள். சரியான நபரைச் சந்திப்பது சாத்தியம்தான். ஆனாலும் தவறான நேரத்தில் சரியான நபரை சந்தித்துவிடுவதால் காதல் கைகூடுவதில்லை. 

இதையும் படிங்க: எக்காரணம் கொண்டும் வீட்டின் இந்த திசையில் குப்பை தொட்டியை வைக்கவே கூடாது.. மீறி வைத்தால் என்னாகும் தெரியுமா?

ஓ..மீனமே! 

மீன ராசிக்காரர்கள் மிகவும் துரதிர்ஷ்டம் கொண்டவர்கள். இவர்களுக்கு ஒருவருடைய மோசமான விசயத்தை கவனிப்பதில்லை அல்லது அதை தவிர்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். ரோஜா பூக்களால் ஆன கண்ணாடியால் மென்மையாகவே உலகைப் பார்க்கிறார்கள். தங்கள் சொந்த மகிழ்ச்சியை தியாகம் செய்யும் இவர்களுக்கு, கடந்த காலத்தை கடந்து வர தெரியும் என்பது மட்டும் தான் ஆறுதல். காதல் எல்லாம் அவ்வளவு வாய்ப்பதில்லை. 

பின்வரும் ராசியினர் காதலில் புகுந்து விளையாடுவார்கள். அதாவது மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகியோர் காதல் வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படி இன்பமாக இருக்கும். இவர்களுக்கும் காதல் முறிவு இருக்கலாம். ஆனால் அது மிகவும் வேதனையாவோ அல்லது சாதாரணமாகவோ இருக்கும். இருப்பினும் காதல் வருகிறது. 

அன்பான வாசகர்களே, இந்த கருத்துக்கள் அனைத்தும் ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. அறிவியல்பூர்வமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: இந்த நபர்களை அவமானம் செஞ்சா நரகத்தில் ஜந்துக்கள்கிட்ட மாட்டி, பிசாசுகளுடன் வாழணும்.. எச்சரிக்கும் கருட புராணம்

Latest Videos

click me!