பிரசவத்திற்கு பிறகு.. கணவனும், மனைவியும் மீண்டும் எப்போது உடலுறவை தொடங்கலாம்?

First Published | Jan 27, 2023, 2:52 PM IST

குழந்தை பிறந்த பிறகு மீண்டும் எப்போது உடலுறவை தொடங்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம். 

பிரசவத்திற்குப் பிறகு உடலுறவை மீண்டும் தொடங்குவது புதிய தாய்மார்களுக்கு முக்கியமான விஷயம். பிரசவத்தின்போது ஏற்படும் உடல், உணர்ச்சி சார்ந்த மாற்றங்கள் பெண்ணின் உடலுறவுக்கான விருப்பத்தையும் திறனையும் பாதிக்கலாம். அப்போது பாலியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது சரியான நேரம் இல்லை. இதில் ஒவ்வொரு பெண்ணின் அனுபவமும் தனித்துவமானது என்பதை புதிய தாய்மார்கள் அறிந்து கொள்வது முக்கியம். 

ஜெய்ப்பூர் மிஷ்கா ஐவிஎஃப் மையத்தின் இயக்குநரும், மகளிர் மருத்துவ நிபுணருமான Dr. ருச்சி பண்டாரி, ஒரு பெண்ணுக்கு பிரசவத்திற்கு பிறகு பிறப்புறுப்பு வலி, இரத்தப்போக்கு, சோர்வு ஏற்படுவது இயல்பானது என்கிறார். இதனால் பாலியல் செயல்பாடு சங்கடமானதாகவும், விரும்பத்தகாததாகவும் மாறலாம். அதனால் மகப்பேற்றுக்கு பிறகான இரத்தப்போக்கு நிறுத்தப்படும் வரை கணவனும், மனைவியும் காத்திருப்பது முக்கியம். உடலுறவுக்கு முன் இதை சோதித்து கொள்ள வேண்டும். இது பொதுவாக 4 முதல் 6 வாரங்கள் எடுக்கும. ஆனால் சில பெண்களுக்கு அதிக நாள்கள் ஆகலாம்.  


பிரசவத்திற்குப் பிறகு உடலுறவை மீண்டும் தொடங்கும் போது பல புதிய தாய்மார்கள் பாதுகாப்பின்மை உணர்வு கொள்வார்கள். சிலரை பதற்றம் பீடித்து கொள்ளும். இந்த உணர்வுகள் உடலுறவுக்கான பெண்ணின் விருப்பத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. அதனால் கணவர்கள் புரிந்துகொண்டு ஆதரவாக இருப்பது முக்கியம். 

பிரசவத்திற்கு பிறகு உடலுறவு வைத்து கொள்ளும்போது யோனியில் ஊடுருவல் வலி ஏற்படுத்தினால் உங்கள் துணையிடம் சொல்லுங்கள். அதை மறைத்து துணையை மகிழ்விக்க முயற்சி செய்யவேண்டாம். ஒருவருக்கொருவர் அப்படி ஊடுருவாமல், இணைந்து சுயஇன்பம் செய்வதன் மூலம் கூட சந்தோஷமாக இருக்கலாம். 

மருத்துவர் பண்டாரி, தாய்ப்பால் கொடுப்பது ஒரு பெண்ணின் ஹார்மோன்கள் மற்றும் லிபிடோவை பாதிக்கும் என்கிறார். சில பெண்களுக்கு பாலூட்டும்போது பாலுறவு மேல் இருக்கும் ஆசை குறையலாம். சிலருக்கு அது ஆசையை அதிகரிக்கவும் வழிவகை செய்யும். முதலில் உங்களை நீங்களே தொடுங்கள். விரல்களால் யோனியை தொட்டு ஆராயுங்கள். தேவைப்பட்டால் மசகு எண்ணெய் பயன்படுத்துங்கள். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பிரசவத்திற்குப் பிறகு நீங்கள் வழக்கம் போல் இல்லாமல் இருக்கலாம். 

இதையும் படிங்க: 'முதலில் காதலை சொன்னது மருமகள் தான்' சொந்த மகனின் மனைவியை திருமணம் செய்து வாழும் முதியவர்!

பிரசவத்திற்குப் பின் பரிசோதனையின் போது நீங்கள் அசௌகரியமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்கவேண்டும். உடல் முழுமையாக குணமடைவதற்கு முன்பு கர்ப்பம் ஆகாமல் இருக்க பிரசவத்திற்குப் பின் கருத்தடைகளை பயன்படுத்துங்கள். பிரசவத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு நிற்கும் வரை காத்திருந்து, கருத்தடைகளைப் பயன்படுத்துவது அவசியம். இந்த நேரத்தில் உங்கள் துணைக்கு அன்பையும், புரிந்துணர்வையும் அளிக்க வேண்டும். பிரசவம் பெண்களுக்கு மனரீதியான பிரச்சனைகளை கொடுக்கலாம். அதனால் கவனமாக செயல்படுங்கள். 

இதையும் படிங்க: பெண்களே! சுயஇன்பம் இப்படி செய்யக் கூடாது.. எல்லையில்லா இன்பம் கிடைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க!

Latest Videos

click me!