சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்கள் செய்யும் 4 முக்கிய தவறுகள்..!!

First Published | Jan 27, 2023, 8:10 PM IST

சுய இன்பத்தில் ஈடுபடும் போது ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. அப்போதைய நேரத்துக்கு இன்பம் கிடைப்பதாக எண்ணி, தேவையற்ற செயல்பாடுகளில் செய்வது பல்வேறு உடல்நலப் பிரச்னைக்கு வழிவகுக்கும். 
 

masturbation

ஆரோக்கியமான ஒவ்வொரு ஆணுக்கும் சுய இன்பம் மீது ஈர்ப்பு இருக்கும். அதுவொரு இயற்கையான நிகழ்வு தான், அப்போது தான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். தனியாக இன்பம் காண்பது தான் சுய இன்பம். இதற்கான செயல்பாட்டில் ஈடுபட நினைக்கும் ஆண்கள், தங்களுக்கு முன்னால் ஒரு லூப் பாட்டில் மற்றும் கவர்ச்சியான ஒரு ஆபாச படத்தை பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் அதன் இன்பத்தில் தொலைந்து, சுய இன்பத்தில் ஈடுபடும் போது சில முக்கியமான தவறுகளை செய்துவிடுகிறார்கள். அது அவர்களுடைய பிறப்புறுப்புக்கு மிகவும் ஆபத்தாக முடிந்துவிடுகிறது. அந்த வகையில் சுய இன்பத்தில் ஈடுபடும் போது ஆண்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகளை குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

உராய்வு

உங்கள் ஆணுறுப்பை மிகவும் கடினமாகவும் வேகமாகவும் தேய்ப்பது, உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். இதனால் உராய்வு ஏற்பட்டு, உறுப்பு அமைந்துள்ள பகுதியில் வீக்கம், தடிப்புகள் மற்றும் வலி ஏற்படும். கூடுதலாக, நீங்கள் அங்கு சரியான சுகாதாரத்தை பராமரிக்கவில்லை என்றால், உங்களுக்கு சிறுநீர்ப் பாதை தொற்றுக் கூட உருவாகலாம்.

Tap to resize

அழுத்தம்

இன்பத்தின் உச்சத்தில், ஆண்கள் தங்கள் ஆண்குறியை மிகவும் கடினமாக அழுத்திவிடக்கூடும். இதனால் ஆணுறுப்புக்குள் முறிவு ஏற்படக்கூடும். பெரும்பாலான ஆண்கள் இந்த தவறை செய்யக்கூடியவர்களாக உள்ளனர். நீங்கள் உச்சக்கட்டத்தை அடைவதாக இருந்தால், மிகவும் கடினமாக அழுத்தாமல் மெதுவாக இன்பத்தில் ஈடுபடுவது நல்லது.

கிளர்ச்சி

நிறைய ஆண்கள் காரில், குறிப்பாக நகரும் காரில் சுய இன்பம் செய்ய விரும்புகின்றனர். பொதுவாக வெளியிடங்களில், இதுபோன்ற கிளர்ச்சி தரும் செயல்பாடுகளில் ஈடுபடுவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கக் கூடும். ஓடும் காரில் சுயஇன்பம் செய்யும் போது, ஆண்கள் சிலர் தங்களுடைய ஆணுறுப்பை உடைத்துள்ளனர். அதனால் உங்களுக்கும், உங்களுடைய இன்பத்துக்கும் மதிப்பளித்து நடப்பது முதிர்ச்சியின் பயனை காட்டும்.

பரிதாபத்தால் உடலுறவுக் கொள்ளும் பார்டனருடன் வாழ்கிறீர்களா..??

வெளிப்பொருட்கள் வேண்டாம்

சில ஆண்கள் தங்கள் ஆண்குறியை ஒரு பாட்டிலுக்குள் வைப்பது அல்லது சுகாதாரமற்ற திசு உருளைக்குள் வைத்து இன்பம் காண விரும்புகின்றனர். இது முற்றிலும் தவறான செயலாகும். அப்போதைய நேரத்துக்கு அது இன்பமாக தெரிந்தாலும், பல்வேறு நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும். நமது கைகளை நன்றாக சுத்தம் செய்த பின்பு தான் சுய இன்பத்தில் ஈடுபட வேண்டும் என்பது மருத்துவர்கள் வழங்கும் அறிவுரை. அதனால் வெளிப்பொருட்களை கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடுவது பல்வேறு உடல்நலன் சார்ந்த பிரச்னைக்கு வழிவகுக்கும். உங்கள் பிறப்புறுப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியாகும். அதை அதிக கவனத்துடன் கையாள வேண்டும்.
 

Latest Videos

click me!