தாம்பத்தியம் ஜம்முனு இருக்க இப்படிதான் மது அருந்தணும்.. உலக நாடுகளின் வினோத மது பழக்கங்கள் தெரியுமா?

First Published Feb 2, 2023, 5:57 PM IST

தாம்பத்திய வாழ்க்கை பாதிக்காமல் இருக்க திருமண விழாவின்போது சில வினோதமான மது பழக்கங்களை சில நாடுகள் பின்பற்றுகிறது. அந்த நாடுகளின் விவரம்.. 
 

உலகெங்கிலும் பல பாரம்பரியங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. சில நாடுகளில் மதுவை வைத்து சில பாரம்பரியங்கள் கடைபிடிக்கப்படுவதை அறிவீர்களா? அதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு வியப்பு ஏற்படலாம்.  ஒரு நாட்டில் ஷூவில் மது அருந்துவதும், இன்னொரு நாட்டில் சியர்ஸ் சொல்ல தடை என்பதும் படிக்கும்போது உங்களுக்கு வினோதமா சடங்குகளாக தோன்றலாம். சில நாடுகளில் மது அருந்துவதற்கும் தாம்பத்திய வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளது என நம்புகிறார்கள். இது குறித்து இங்கு காணலாம். 

நைஜீரியாவில் திருமணத்தின் விழாவின்போது, ​​மணமகளுக்கு அவரது தந்தை மதுவினை கோப்பையில் ஊற்றி வழங்குவார். அந்த மதுக்கோப்பையை மணவிழாவில் தன் துணைக்கு மணப்பெண் கொடுப்பார். மதுவுடன் காதல் தழும்ப தன் கோப்பையை மணமகனிடம் மணப்பெண் கொடுத்தால் தான் அது திருமணமாக கருதப்படுகிறது. 

ரஷ்யாவிலும் போலந்திலும் கொஞ்சம் ஒரே மாதிரியான முறை பின்பற்றப்படுகிறது. இங்கு திருமண விழாவில் ஓட்காவுடன் ஜூஸ் அல்லது வேறு ஏதேனும் கலப்பது தாம்பத்தியத்தை மோசமானதாக்கும் என கருதப்படுகிறது. பிரான்ஸ், ஜெர்மனியில் திருமண விழாவில், கண்களை பார்க்காமல் மது கோப்பையில் சியர்ஸ் சொல்வது தாம்பத்திய வாழ்க்கையை 7 ஆண்டுகள் பாதிக்கும் என நம்பப்படுகிறது. 

ஜெர்மனியில் திருமணத்திற்கு முன்பு வினோதமான சடங்கு பின்பற்றப்படுகிறது. மணமகனின் தோழன் மணமகளை கடத்தி விடுகிறார். அவர் மணமகனுக்காக சில தடயங்களை விட்டு செல்வார். அதைப் பின்பற்றி மணமகளை கண்டுபிடிக்க வேண்டும். கடத்தப்பட்ட மணமகளை பாரில் (bar) தான் வைத்திருப்பர். அங்கு சென்று அவர்களுக்கு மது வாங்கி கொடுத்துவிட்டு மணமகளை காப்பாற்ற வேண்டும்.

உக்ரைனில் மணமகளின் ஷூவை திருடும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மணமகளின் ஷூவை வெற்றிகரமாக திருடிவிட்டால், அவர்கள் என்ன கேட்டாலும் தரப்படுமாம். ரொம்ப அரிதாக விருந்தினர்களுக்கு திருடப்பட்ட ஷூவில் மதுவும் பரிமாறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ரொம்ப மகிழ்வான தருணங்களில் ஷூவில் மது அருந்தப்படுகிறது. 

மது அருந்தும்போது சியர்ஸ் சொல்ல தடை விதித்துள்ள நாட்டை அறிவீர்களா? 1849 ஆம் ஆண்டில், ஆஸ்திரிய இராணுவத்தினரால் ஹங்கேரிய புரட்சியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதை ஆஸ்திரிய இராணுவம் மது அருந்திவிட்டு சியர்ஸ் சொல்லி கொண்டாடியது. அதனால் ஹங்கேரியில் சியர்ஸ் சொல்வது தடைசெய்யப்பட்டது. 

இதையும் படிங்க: தினமும் வெங்காயத்துல டீ போட்டு குடித்தால்.. இத்தனை நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாம் தெரியுமா?

இதையும் படிங்க:நம்பவே முடியாத பெண்களின் செக்ஸ் கற்பனைகள்... எப்படிலாம் யோசிக்குறாங்க பாருங்க..

click me!